Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'தொகுதி மறுசீரமைப்பு' பாஜகவின் அரசியல் ஆதிக்கம்.. தென் மாநிலங்களுக்கு நேரும் இழப்பு.. பினராயி விஜயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்க வேண்டும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயம் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்பட்டு வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பினராயி விஜயன், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பாக தொகுதி மறுசீரமைப்பு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 24 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். 3 மாநில முதலமைச்சர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

Delimitation Meeting Pinarayi Vijayan Chennai

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2 ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. இதனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது பிரதிநிதித்துவம் குறைவது என்பது அரசியல் வலிமை குறைவதாகவே பார்க்க வேண்டும். எண்ணிக்கையே அதிகாரம்.

தொகுதி மறுசீரமைப்பு ஏற்பட்டால் சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். இதனால் தொகுதி மறுசீரமைப்பை சாதாரணமாக கருதக் கூடாது. இந்த போராட்டம் மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல. இந்த போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மற்ற மாநில பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளின் கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை மத்திய அரசு தொடங்க வேண்டும்.

எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம். மாநிலங்களின் பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். குறுகிய அரசியல் லாபத்திற்காக தொகுதி மறுசீரமைப்பை பயன்படுத்த பாஜக நினைக்கிறது.

வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் தென் மாநிலங்களின் தொகுதிகள் கணிசமாக குறையும். வெறும் மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையாகும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களை ஒருங்கிணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+