சடர்ன் டுவிஸ்டு! அதிமுகவில் இணைந்தார் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் -"வேவு பார்க்கும் 420 மலை”
"#420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?”
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமலேயே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்து சமூக வலைதளங்களில் மூலமாக பாஜகவின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதுடன், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலடியை கொடுப்பதில் பெரும்பங்காற்றியவர் நிர்மல் குமார்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி எதிர்ப்புகளை வாங்கிக்கட்டும் நிர்மல் குமார், பாஜக ஐடி விங்கின் முதுகெலும்பாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

நிர்மல் குமார் ட்விட்டர் பதிவு
இதுகுறித்து ட்விட்டரில், "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று கூறி ஒரு விரிவான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமலேயே அவர் விமர்சித்து இருக்கிறார்.

பல நூறு முறை சிந்தித்தேன்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

செருப்பாக பயன்படுத்தினார்
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

மனநலம் குன்றிய மனிதர் போல்..
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

அமைச்சருடன் பேச்சு
2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

420மலை
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிமுகவில் நிர்மல் குமார்
இந்த நிலையில் அவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பாஜக பெரிய கட்சிகளுக்கு இணையாக வலுவாக இருந்ததற்கு நிர்மல் குமாரின் பங்கு முக்கியமானது என்று கூறப்பட்ட நிலையில் அவரது இந்த முடிவு பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications