Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால்.. வடமாநிலத்தவர் தான் பணிபுரிவார்கள்.." கரு.நாகராஜன் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால்.. வடமாநிலத்தவர் தான் பணிபுரிவார்கள்.. கரு.நாகராஜன் பரபர

    கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பொன்னையனின் பேச்சு தான் இப்போது பேசுபொருள் ஆகி உள்ளது. நீட், காவிரி, ஜிஎஸ்டி, ஈழ தமிழர்கள் விவகாரத்தில் பாஜகவைக் குற்றஞ்சாட்டும் வகையில் அவர் பேசியிருந்தார்.

     பொன்னையன் பரபர

    பொன்னையன் பரபர

    பொன்னையன் பேசுகையில், "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பாஜகவின் பருப்பு வேகாது. பாஜக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை" என்று கூறியிருந்தார். பொன்னையன் பேச்சு சர்ச்சையான நிலையில், இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

     பாஜக சாடல்

    பாஜக சாடல்

    பொன்னையன் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வலியுறுத்தி உள்ளார். இது மட்டுமின்றி போட்டி தேர்வுகள் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். இது குறித்து சென்னை தாம்பரம் அடுத்த நெடுஞ்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பா.ஜ.கவை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு!

     டிவி எல்லாம் பார்க்க மாட்டாரா

    டிவி எல்லாம் பார்க்க மாட்டாரா

    அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சொல்லிவிட்டு சொன்னாரா என விளக்கவேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளில் பாஜக முன்னெடுப்பு பணிகளைச் செய்துவருகிறது. இதையெல்லாம் அவர் பார்க்க மாட்டாரா? அவர் பேப்பர் படிக்க மாட்டாரா? டிவி பார்க்க மாட்டாரா?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை அவர் எழுப்பினார்.

     தமிழக இளைஞர்கள்

    தமிழக இளைஞர்கள்

    தொடர்ந்து போட்டித்தேர்வுகள் குறித்துப் பேசிய அவர், "அதுபோல தேசிய அளவில் போட்டி தேர்வுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. தபால் துறை, ரயில்வே கலாசி போன்ற பணிகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதுபோல் தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதில்லை. இதனால் ஒருவரும் பணியில் இல்லை எனக் கூறினாலும் ஆச்சர்யபடுவதுவதில் ஒன்றுமில்லை!

     பங்கேற்பது இல்லை

    பங்கேற்பது இல்லை

    போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டால் தானே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லை என்றால் வடமாநில இளைஞர்கள் தான் அந்த பணிகளிலும் பணி அமர்த்தப்படுவார்கள்" என்றார். தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் அதிகம் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜனின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+