மாமன்னன் போல பாஜகவின் கருப்பு முருகானந்தம் 2014-ல் பாதிக்கப்பட்டுள்ளார்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
சென்னை: மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் தேர்தலின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை போல பாஜகவின் கருப்பு முருகானந்தம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்துள்ளார் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்த மாமன்னன் படம் அண்மையில் வெளியானது. இந்த படம் சினிமா ரசிகர்களை தாண்டி பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் ஏனெனில், படத்தில் காட்டப்பட்ட ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், தனித்தொகுதி அரசியல், இடஒதுக்கீடு என்று பல்வேறு அரசியல்களை வலுவாக இந்த படம் பேசுகிறது.

தலித் ஒருவர் தனித்தொகுதியில் எம்எல்ஏ ஆனாலும் கூட அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை, எம்எல்ஏ ஆனாலும் கூட ஒரு தலித் ஜாதி ரீதியாக எப்படி எல்லாம் ஒடுக்கப்படுகிறார். பிரசாரம் செய்ய செல்வதற்கு முன்பாக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவற்றை மாமன்னன் படத்தின் வடிவேலும் கதாப்பத்திரம் காட்டுவதாக அமைந்தது. இந்த படத்தின் பல காட்சிகள் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மாமன்னன் படம் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணை ஒன்றின் போது மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன், மாமன்னன் பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட பாஜகவின் கருப்பு முருகானந்தம் மாமன்னன் படத்தின் கதாபாத்திரம் போல பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த விவரம் வருமாறு:- 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக தஞ்சாவூர் தொகுதியில் கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். தொகுதிக்கு உட்பட்ட மல்லிப்பட்டினத்திற்கு கருப்பு முருகானந்தம் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கருப்பு முருகானந்தம் பிரசாரம் செய்ய சென்ற போது வன்முறை ஏற்பட்டது. அப்போது வாகனங்கள், இயந்திர படகுகள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
இந்த சேதங்களுக்கு இழப்பீடு கோரியும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஹபீப் முகம்மது என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது உத்தரவில் நீதிபதி கூறியிருந்ததாவது:- மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு எம்.எல்.ஏவாக இருப்பார்.
தேர்தலில் போட்டியிடும் போது அவரை வீழ்த்த எதிர்தரப்பினர் அவர் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் திட்டத்தை செயல்படுத்துவார்கள். இதனால் அவரால் வடிவேலுவால் பிரசாரத்திற்கு செல்லமுடியாது. ஆனால் வடிவேலுவுக்கு டெக்னாலஜி கைகொடுக்கும். சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரசாரம் மேற்கொள்வார். அத்தகைய சூழலைத்தான் 2014 மக்களவை தேர்தலில் கருப்பு முருகானந்தம் எதிர்கொண்டுள்ளார்.

மல்லிகாப்பட்டினத்திற்கு 14.04.2014 அன்று கருப்பு முருகானந்தம் பிரசாரத்திற்கு சென்ற போது கிராமத்திற்கு வெளியே ரகுமான்கான் என்பவர் தலைமையில் திரண்டவர்கள் அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் பல்வேறு வழிகளில் வாக்குகளை சேகரிக்கிறார்கள். வேட்பாளர்களை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும். வேட்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளது.
கட்சிகளை பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட முடியும். எனினும் அதற்கு முன்பாக உண்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கள், எதிர்குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எனவே, கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். ஆகவே மனுதாரர் கீழமை நீதிமன்றத்தின் விசாரணை முடிவில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications