முந்தானையை பிடிச்சு இழுத்தாங்க.. ஆயிரம் விளக்கில் அன்றே ஆவேசப்பட்ட குஷ்பு.. மீண்டும் அதிரடி?
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக குஷ்பு பிரச்சாரம் செய்கிறார்
சென்னை: இந்த முறை தேர்தலில் தமிழக பாஜக புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது.. அதன்படி அக்கட்சியின் பிரபலம் குஷ்புவின் தயவையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கத்தை குறி வைத்து காய் நகர்த்தி கொண்டிருந்த குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியே கடைசி நேரத்தில் ஒதுக்கப்பட்டது..
ஆயிரம் விளக்கு தொகுதியை ஸ்டாலினின் தொகுதி என்றே அழைப்பார்கள்.. திமுகவின் கோட்டை என்று தெரிந்தும் குஷ்பு துணிந்து களமிறங்கினார்..

குஷ்பு
இந்த பிரச்சார சமயத்தில் ஸ்பெஷல் என்னவென்றால், குஷ்புவிடம் உள்ள இயல்பான குணங்களே அவருக்கு நல்ல பெயரை தொகுதியில் பெற்று தந்தது.. நடிகை என்ற பந்தா எப்போதுமே இருக்காது.. எல்லாரிடமும் இயல்பாகவே வந்து பேசுவார்.. அப்படித்தான், தொகுதிக்குள் கேஷூவலாக பேசி கொண்டிருந்தார்.. பிரச்சனைகளை கேட்டறிந்தார்..

பாஜக எதிர்ப்பு
இத்தனைக்கும் சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜகவுக்கு அப்போது கடும் எதிர்ப்பு இருந்தது.. பெரும்பாலான இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லவே வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.. இதெல்லாம் தெரிந்துதான், இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை குஷ்பூ குறி வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.. கட்சி இதற்கான ஒரு மிகப்பெரிய செலவை ஏற்று கொண்டாலும், குஷ்புவின் அயராத உழைப்பு பலமாக இருந்தபோதிலும், தோல்வியையே தழுவினார். எனினும், திமுக கோட்டைக்குள் குஷ்பு பெற்ற வாக்குகள், பாஜக மேலிடத்துக்கு அதிருப்தி ஏற்படாமல் பார்த்து கொண்டது.

செம வியூகம்
இப்போது விஷயம் என்னவென்றால், மீண்டும் குஷ்புவின் தயவை நாடுகிறது தமிழக பாஜக.. அதிலும் இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது... அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க பாஜக முயன்று கொண்டிருக்கிறது.. இந்த பலத்தை நிரூபிக்க வலுவான நபர்கள் கட்சியின் தேவையாக இருக்கிறது.

அண்ணாமலை
மற்றொருபுறம், திமுக - பாஜக வேட்பாளர்கள் இடையே பல இடங்களில் நேரடி போட்டி இருக்கிறது.. அதனால்தான், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஏற்கனவே இறங்கிவிட்டார்.. ஆனால், சென்னையில் வெற்றி பெற மிகப்பெரிய ஸ்டார் பிரபலம் தேவை என்பதை பாஜக மேலிடம் உணர்ந்துள்ளது.. சென்னையின் பல வார்டுகளில் பாஜகவை வெற்றி பெற வைக்கும் வகையில் குஷ்புவை பிரச்சார களத்தில் இறக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஸ்டார் பிரபலம்
ஏற்கனவே, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்ற நிலையில், அந்த ஓட்டுக்களை இந்த முறையும் பாஜகவுக்கே திருப்பிவிட குஷ்புவை கட்சி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.. இப்போது குஷ்பு லண்டனில் இருக்கிறார்.. அடுத்த வாரம்தான் சென்னைக்கு வருகிறார்.. சென்னை வந்ததுமே பிரச்சாரத்தில் அதிரடியாக குதிப்பார் என்று தெரிகிறது..

தாமரை மலருமா?
அதேசமயம், வீடு வீடாக சென்று குஷ்பு பிரச்சாரம் செய்தால்தான் பெரும் பலன் கிட்டும் என்றும் அக்கட்சி நம்புகிறது. சென்ற முறை தேர்தல் பிரச்சாரத்திலேயே, திமுகவை சரமாரியாக விமர்சித்து ஓட்டுக் கேட்டவர் குஷ்பு.. அதுவும் பல வருடத்துக்கு முன்பு திமுகவில் தனக்கு நடந்த பிரச்சனையை, ஆயிரம் விளக்கு தொகுதியில் வந்து இந்த முறை சொன்னார்.. அது ஓரளவு குஷ்புவுக்கு அனுதாபத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம்..

ஸ்டாலின் மீது தாக்கு
கட்சிக்காரர்கள் என் முந்தானையை பிடிச்சு இழுத்தாங்க.. கல்லை கொண்டு எறிந்தார்கள்.. நான் பதறிப்போய் ஸ்டாலினிடம் கெஞ்சினேன் அவரை பார்க்க வேண்டும் என்று... ஆனால், சாப்பிட்டுட்டு இருக்கேன், இப்போ பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டார். என் 2 பெண் குழந்தைகள் தனியாக இருக்காங்க, காப்பாத்துங்கன்னு ஸ்டாலினிடம் கதறினேன்... கட்சிக்காரர்களிடம் கொஞ்சம் சொல்லுங்கள் என்று சொன்னேன்... அப்பவும் முடியாதுன்னு சொல்லிட்டார்.. இந்த திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?" என்று ஆயிரம் விளக்கு தொகுதியெல்லாம் குஷ்பு பிரச்சாரம் செய்து வந்தார்.

சீண்டல்?
இந்த முறையும் திமுகவை சீண்டி குஷ்பு பிரச்சாரம் செய்வாரா? அல்லது 8 மாத கால ஆட்சியின் குறைகளை சொல்லி விமர்த்து ஓட்டு கேட்பாரா? அல்லது பாஜகவின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பாரா? இவைகளினால் ஆயிரம் விளக்கு தொகுதி வெளிச்சத்தில், தாமரை மலர்ந்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பெல்லாம் எழுந்துள்ளது.. என்ன நடக்க போகிறதென்று பார்ப்போம்..
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications