திருமா கருத்து சொன்னதுமே.. வரிந்து கட்டி கொண்டு வந்து ட்வீட் போட்ட குஷ்பு.. ரஜினிக்காக!
ரஜினிகாந்த் அரசியல் குறித்து குஷ்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "ரஜினி சார், உங்களுடைய ஆரோக்கியமான உடல்நலம், உங்களுடைய மகிழ்ச்சி, இவைகளை தவிர எங்களுக்கு வேறு சந்தோஷம் கிடையாது.. நீங்கள் எங்களின் அபூர்வ வைரம்.. நீங்கள் எங்களுடைய சொத்து.. உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்க.." என்று குஷ்பு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.. இனிமேலும் இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதிலும் சஸ்பென்ஸ் உள்ளது.

இணையத்தில் பரவிய போலி கடிதம் ஒன்றுக்கு, விளக்கம் அளித்த ரஜினி, "அது நான் எழுதிய கடிதம் இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்த உடல்நிலை குறித்த தகவல் உண்மை தான்" என்று கூறியிருந்தார். நேற்றில் இருந்து இப்போது வரை ரஜினி செய்திகள்தான் சோஷியல் மீடியாவில் இடம்பிடித்து வருகின்றன.
ரஜினி பெயரில் லெட்டர் வெளிவந்தபோதும் சரி, அதற்கு ரஜினி விளக்கம் தந்த போதும் சரி, ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் வாய் திறக்கவே இல்லை.. எந்த கருத்தும் அதுகுறித்து சொல்லவே இல்லை.. அவ்வளவு ஏன், ரஜினி அரசியலுக்கு வருவார், முதல்வர் ஆவார் என்று அறைகூவல் விடுத்தவர்களும் சத்தம் இல்லாமல் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான் விசிக திருமாவளவன் தன்னுடைய கருத்தை சொன்னார்.. "ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார்.. சாதி மத அரசியலில் சிக்கிக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்... நலத்தோடும், வளத்தோடும் ரஜினி பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று உரிய அக்கறையோடும், கனிவான அன்போடும் தெரிவித்திருந்தார்.

திருமா இப்படி சொன்னாரோ இல்லையோ, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே திருமாவுக்கு போட்டியாக குஷ்பு ஒரு ட்வீட் போட்டுவிட்டார்.
அதில், "அன்புள்ள ரஜினி சார், உங்களுடைய ஆரோக்கியமான உடல்நலம், உங்களுடைய மகிழ்ச்சி, இவைகளை தவிர எங்களுக்கு வேறு சந்தோஷம் கிடையாது.. நீங்கள் எங்களின் அபூர்வ வைரம்.. நீங்கள் எங்களுடைய சொத்து.. உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்க.. எந்த வகையிலும் உங்கள் மீதான எங்களின் அன்பு குறைய போவதில்லை.. எப்பவுமே நீங்களுக்கு நீங்கள் முன்மாதிரியானவர்" என்று சற்று கூடுதல் அக்கறை + அட்வைஸ் கலந்து பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications