அண்ணாமலை எங்கே இங்க ஆளை காணோம்..? ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங் என கோவாவில் கலக்குறாரே!
பனாஜி: கோவாவில் இன்று நடைபெற்ற 'அயர்ன்மேன்' போட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் என டிரையத்லான் போட்டிகளில் அசத்தினார். IRON MAN 70.3 Goa போட்டிகளில் அண்ணாமலை பங்கேற்று ஸ்மிம்மிங், சைக்கிளிங் மற்றும் ரன்னிங் போட்டிகளில் அசத்தியுள்ளார்.
இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவில் கடந்த பல ஆண்டுகளாக அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. உடற்திறனைச் சோதிக்கும் இந்தப் போட்டி, 1.9 கி.மீ தூரம் நீச்சல் அடித்து செல்ல வேண்டும். 90 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். 21.1 கி.மீட்டர் தூரம் ஓட வேண்டும். இது கடினமான சர்வதேச விளையாட்டு போட்டி.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் போட்டியில், 31 நாடுகளில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இதில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
அண்ணாமலை, அயன்மேன் 70.3 சேலஞ்ச் போட்டியில் பங்கேற்பதற்கான ஆடை அணிந்து, நீச்சல் போட்டி முடித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட மற்ற வீரர்களுடன் ஓடினார். பின்னர், சைக்கிளிங் தொடங்கினார். முழுமையாக அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயத்தை நிறைவு செய்துள்ளார் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் கனவோடு, பாஜக தேசிய தலைமை, அதிரடி அரசியல் மேற்கொள்ளும் வகையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழக அரசியல் களத்தில் இறக்கியது. அண்ணாமலையின் அதிரடி அரசியல் ஆளுங்கட்சியான திமுகவிற்கு சவலாக இருந்தது.
நாள்தோறும் பேட்டி, அவ்வப்போது போராட்டம், சர்ச்சை என தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்து வந்தார். பின்னர், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து தேசிய தலைமை மாற்றியது.
இதனையடுத்து பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அண்ணாமலை, இயற்கை விவசாயம், மாட்டுப்பண்ணையில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டும், பேசியும் வருகிறார்.
இந்நிலையில் தான் அண்ணாமலை தனது தீவிர அரசியல் பணிகள், தனிப்பட்ட வேலைகளுக்கு இடையே கோவாவில் நடைபெறும் அயன்மேன் 70.3 சேலஞ்ச் போட்டியில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்களை அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications