மாம்பழத்திற்கு கூடுதல் தித்திப்பு தந்த தாமரை! 25 சீட்+ 1 ராஜ்யசபா எம்பி பதவி! டீலுக்கு அன்புமணி ஓகே?
சென்னை: சென்னை பனையூர் இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு 1 மணி நேரமாக நீடித்தது. இந்த நிலையில் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரம், ஆளும் கட்சி மீதான அட்டாக் என பல வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையக்க கூடும் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது வலிமையான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம் என கூறி வருகிறார்.
அந்த வகையில் கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகள் நடத்தப்படுகின்றன. தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா, அன்புமணியுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு வந்திருந்த பைஜெய்ந்த் அன்புமணியுடன், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனையில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து பேரங்களும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பாமகவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்குவதாகவும் அன்புமணியிடம் பைஜெய்ந்த் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த டீலுக்கு அன்புமணி ஓகே சொல்லிவிட்டதாகவும் விரைவில் கூட்டணியில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் தெரிகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெனரல் செக்கப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவருடன் தனியாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பே பைஜெய்ந்த், அன்புமணி மீட்டிங்கிற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அண்மைக்காலமாக தாய்- மகன் இடையே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். ஆனாலும் தான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறிக் கொள்கிறார்.
இத்தனைக்கும் என் இனிஷியலை பயன்படுத்துவதை தவிர அன்புமணிக்கு என்னிடம் எந்த உரிமை கிடையாது. நேற்று கூட செய்தியாளர்கள் சந்திப்பின்போது அன்புமணியை கட்சியைவிட்டு நீக்கியாகிவிட்டது. அவர் வேண்டுமானால் தனிக்கட்சியை தொடங்கி கொள்ளலாம். பாமகவில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னை மருத்துவமனையில் பார்த்தவர்களை அவதூறாக அன்புமணி பேசியதை போல் மாடு மேய்க்கும் சிறுவன் கூட பேசமாட்டான் என காட்டமாக விமர்சித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அன்புமணியுடன் பைஜெய்ந்த் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாமகவுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போனதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவரது இசைவில்லாமலேயே கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்ததாக சொல்லப்பட்டது. இரவில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு காலையில் தைலாபுரத்தில் பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications