“கரைவேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது கரூர் காவல்துறை” - ஹெச்.ராஜா அட்டாக்!
சென்னை: "காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தகுந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் இருந்ததாக தெரியவில்லை. கரூர் காவல்துறை கரை வேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது" என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகியுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். கீழே சின்ன குப்பை பாக்கெட் கூட விழுந்தது கிடையாது. இந்து முன்னணி தொண்டர்கள் நாற்காலிகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினர். இந்த மாதிரி கட்டுப்பாடுகளை வைத்து கட்சியை வளர்த்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. தவறு தான்.
ஆனால் நிர்வாகம் என்ன செய்தது? காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தகுந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் இருந்ததாக தெரியவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது எப்படி நடந்தது, காரணம் என்ன என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மாநில அரசாங்கமும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏதாவது சதியா, இயல்பாக நடந்த விபத்தா என்பது குறித்து மாநில அரசும் அதனுடைய அறிக்கையில் குறிப்பிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியும் இது குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே கரூர் எஸ்.பி சரியாக முறைப்படி செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கரூர் காவல்துறை கரை வேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications