ஆமாங்க அண்ணாமலை லேகியம்தான் விற்கிறார்.. அதிமுக ஆர்.பி உதயகுமாருக்கு பாஜக கே.பி. ராமலிங்கம் பதில்
சென்னை: அண்ணாமலை லேகியம் விற்பவர்தான் என்று பாஜக மாநிலத்துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார். ஊழல் என்ற நோயை ஒழிக்கும் லேகியத்தை அண்ணாமலை விற்பனை செய்வதாக கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர் இரண்டு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அதிமுக, பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று இதுவரை முடிவாகவில்லை.

கூட்டணி கதவு திறந்துதான் இருக்கிறது என்று அமித்ஷா சொன்ன அதே நேரத்தில் அதை நான் பார்க்கவில்லை என்று பதில் சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை நாங்கள் அழைக்கவில்லை என்று சொன்ன அண்ணாமலை, கடைசி நேரத்தில்தான் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரியவரும் என்று பேட்டி அளித்தார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக என்ற இயக்கத்தைப்பற்றி அவருக்கு தெரியவில்லை. இன்னமும் ஒரு கவுன்சிலராகக் கூட ஜெயிக்கவில்லை. இதுவரை எந்த அனுபவமும் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால்தானே பக்குவம் வரும். இன்னமும் அவருக்கும் பக்குவமே வரவில்லை என்று சொன்னார்.
அவர் என்ன சொல்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை. அண்ணாமலை லேகியம் விற்பது போலவே பேசுகிறார். வாங்கய்யா வாங்க.. உடனே வாங்க.. இந்த லேகியம் சாப்பிடுங்கய்யா.. காய்ச்சல் சரியாகும் இந்த லேகியம் உங்களுக்காக தயாரிக்கப்பட்டது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு கிடைக்காதுய்யா.. ஐயா நீங்க யாரையும் நம்பாதீங்க. செத்தா பார்க்காதீங்க.. உயிரோடு இருந்தா வந்து பாருங்க என்று சொல்கிறார் அண்ணாமலை. அவர் ஒண்ணுமே இல்லை வெறும் பூஜ்ஜியம் என்று சொன்னார் உதயகுமார்.
இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று யார் வந்தாலும் தொட்டுப்பார்க்க முடியாது. சாமானிய தொண்டனாக நான் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த வித தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம். சும்மா பூச்சாண்டி காட்டுவது ஐயா என்று சொல்வது.. எல்லாம் இங்கே வேண்டாம். எங்களுக்கும் பேசத்தெரியும் நாங்க எல்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டு எங்க பொதுச்செயலாளருக்கு கட்டுப்பட்டு பேசாமல் இருக்கிறோம் என்று கடுமையான கருத்துக்களை முன் வைத்தார் ஆர்.பி. உதயகுமார்.
ஆர்.பி உதயகுமாரின் பேட்டி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரது கருத்துக்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் பேசியுள்ளார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கே.பி. ராமலிங்கம், ஊழல் என்ற நோயை ஒழிக்கும் லேகியத்தை அண்ணாமலை விற்பனை செய்கிறார் என்று கூறினார்.
அண்ணாமலை லேகியம் விற்பது உண்மைதான். ஊழல்வாதிகளை அண்ணாமலை ஒழிப்பார். ராமரைப் போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி. இவரைப்போன்றவரை இளைய தலைமுறையினர் பார்த்ததில்லை என்றார்.
கருத்துக்கணிப்புகளில் தென் மாநிலங்களில் பாஜக நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.பி. ராமலிங்கம், கருத்துக்கணிப்புகளை விட மக்களின் மனநிலையே தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியம் என்றும் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications