தவெகவுக்கு இருப்பது நக்சல் மனநிலை! விஜய் கட்சியால் திமுகவுக்கு தான் ஆபத்து! வினோஜ் பி செல்வம் தாக்கு
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக தடுத்தது போலவே இப்போது தவெகவும் தடுத்து வருவதாக பாஜகவின் வினோஜ் பி. செல்வம் சாடியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் இந்த மனப்பான்மையை பாஜக வேரோடு பிடுங்கி எறியும் எனக் கூறிய அவர், தவெக நக்சல் மனப்பான்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி என்றும் சாடினார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இப்போதே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவிட்டது. ஒரு பக்கம் திமுக தனது கூட்டணியுடன் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

விஜய்
இதற்கு நடுவே விஜய்யும் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார். தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று விஜய் பேசி வருகிறார். இதில் அவர் திமுக மற்றும் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் குறிப்பிடும் விஜய், அவர்களுடன் கூட்டணி வைக்கப் போவதே இல்லை என்று சொல்லி காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்,
இதற்கிடையே நடிகர் விஜய்யையும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தையும் பாஜகவின் வினோஜ் பி. செல்வம் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க திமுகவின் வழியில் தவெகவும் செயல்படுவதாக வினோஜ் பி. செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
வினோஜ் வி செல்வம் தாக்கு
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இங்குப் புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள ஒருவர் தேவையில்லாமல் பேசி வருகிறார். அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பழைய குழந்தையான திமுக வயதாகிவிட்டது, எனவே விஜய் வந்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக என்ன செய்யுமோ அதேபோலத் தான் விஜய்யின் அரசியல் நகர்வுகள் உள்ளன. திமுகவின் அணுகுமுறையையே விஜய்யும் பின்பற்றுகிறது.
நக்சல் மனநிலை
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படித் தடுத்ததோ, விஜய்யும் இப்போது அதைத்தான் செய்கிறார்" என்றார். மேலும், தவெக நக்சல் மனப்பான்மையுடன் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் இந்த மனப்பான்மையை பாஜக வேரோடு பிடுங்கி எறியும் என்றும் வினோஜ் பி செல்வம் உறுதிப்படத் தெரிவித்தார்.
விஜய் அரசியலை வினோஜ் பி செல்வம் விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கே விஜய்யை திமுக வளர்த்தெடுப்பதாக இதற்கு முன்பும் சாடியிருந்தார். இது தொடர்பாக அப்போது அவர் மேலும், "2021இல், எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து வெற்றிபெற கமல்ஹாசனை திமுக உருவாக்கியது. அதுபோலத் தான் இந்த முறையை விஜய்யை உருவாக்கியுள்ளனர். ஆனால், இந்த முறை திமுகவுக்கு தான் விஜய் அதிக பாதிப்பை ஏற்படுத்துவார். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகமாக இருக்கிறது. எனவே, திமுகவால் இந்த முறை வெல்ல முடியாது" என்றார்.
4 முனைப் போட்டி
தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி இருக்கும் என்றே தெரிகிறது. திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி இருக்கும். இதுபோக சீமான் வழக்கம் போல 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதைத் தாண்டி விஜய்யின் தவெக தலைமையிலும் ஒரு அணி உருவாகும் என்றே தெரிகிறது.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்












Click it and Unblock the Notifications