அருவருப்பின் உச்சகட்டம்.. த்ரிஷா பற்றி பேசிய மன்சூர் அலிகானுக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைகள்!
சென்னை: மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசியது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். தான் கூறிய கருத்தை தவறாக சித்தரித்து சிலர் வெளியிட்டுள்ளனர். த்ரிஷாவிடம் தவறாக கட் செய்து வீடியோவை காட்டி கோபப்பட வைத்துள்ளனர் எனக் கூறினார் மன்சூர் அலிகான்.
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுய விளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியிருப்பது அருவருப்பின் உச்சக்கட்டம். தொடர்ந்து சமுதாய விரோத கருத்துக்களை பேசி பரபரப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கக் கூடிய ஒரு நபர் இவர். தரக்குறைவாக பேசுவதையே தன் தரம் என்ற கொள்கையுடையவர் இந்த நபர். நடிகை திரிஷா குறித்து பேசிய மன்சூர் அலிகானை உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சு சுதந்திரம் என்கிற பெயரில் சமுதாயத்தை சீர்கெடுக்கும் இந்த நபரை இனி ஊடகங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications