ராஜ்பவனுக்கு படையெடுத்த பாஜக பெண் நிர்வாகிகள்! மாணவி சம்பவத்தில் நீதி கேட்டு ஆளுநரிடம் மனு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்து வருகின்றன. தவெக விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மனு அளித்த நிலையில் தற்போது, பாஜக பெண் நிர்வகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு, ராதிகா சரத்குமார், விஜயதாரணி உள்ளிட்டோர் ஆளுநர் ரவியை சந்தித்து அவரிடம் மனுவை அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதேபோன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்து இருந்தார்.

இதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து மனு அளித்தார். இந்த நிலையில் பாஜக பெண் நிர்வகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு, ராதிகா சரத்குமார், விஜயதாரணி உள்ளிட்டோர் ஆளுநர் ரவியை சந்தித்து அவரிடம் மனுவை அளித்தனர்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications