பாஜக தமிழ்நாட்டில் "நோ" வளர்ச்சி.. அண்ணாமலை தலைமையில்.. 2014ஐ விட மோசமாக சுருங்கிய தாமரை!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் என்ன இமேஜ் இருக்கிறதோ இல்லையோ.. வடமாநிலங்களில் பெரிய இமேஜ் இருக்கிறது. பாஜகவை வளர்த்துவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு புரட்சியை ஏற்படுத்தி விட்டார் என்றெல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டன. சமூக வலைத்தளம், வார் ரூம் மூலம் மிக கவனமாக உருவாக்கப்பட்ட பிம்பம் அது.

ஆனால் அந்த பிம்பம் இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் படுதோல்வியுடன் முடிந்து உள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி. இந்திய அளவில் கூகுள் தொடங்கி டிவி வரை பல இடங்களில் இந்த தொகுதி பற்றி தேடப்பட்டது. ஊடகங்களில் இருக்கும் எஸ்இஓ இன்ஜினியர்களுக்கு தெரியும்.. இந்த தொகுதி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று. அதற்கு காரணம் அண்ணாமலை.
வடஇந்தியாவில் அவர் தமிழ்நாட்டின் பாஜகவின் வளர்ச்சி பற்றி விட்ட சவால்கள் காரணமாக கோவை பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆனால் வடஇந்தியாவில் எதிர்பார்க்காத விதமாக கோவையில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி முகம் கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.
பாஜக நோ வளர்ச்சி: அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழக பாஜக வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால்
2014: 5.5% (2,223,566 வாக்குகள்) (என்டிஏ கூட்டணி)
2019: 3.7% (1551924 வாக்குகள்) (அதிமுக கூட்டணி)
2024: 10.7% (3345897 வாக்குகள்) (என்டிஏ கூட்டணி) முன்னேற்றம் போல தெரியலாம்.
ஆனால் 2014ல் பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. அப்போது அவர்கள் போட்டியிட்டது 8 சீட். 2019ல் அவர்கள் போட்டியிட்டது 5 சீட். 2019ல் ஒரு தொகுதிக்கு 3 லட்சம் வாக்குகள் வந்துள்ளது. 2014ல் ஒரு தொகுதிக்கு சராசரியாக 277945 வாக்குகள் வந்துள்ளது. ஆனால் 2024ல் 23 இடங்களில் பாஜக சின்னம் நின்றுள்ளது. பாரி வேந்தர் தேவநாதன் யாதவ் எல்லாம் சேர்த்து.
இதில் தொகுதிக்கு 1.7 லட்சம் வாக்குகள் என்று பாஜக சுருங்கி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் எடுத்ததை விட பாஜக சரிந்து உள்ளது. 50 சதவிகித வளர்ச்சி அண்ணாமலை தலைமைக்கு கீழ் சென்றுள்ளது. மொத்தமாக 11 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளது. பாஜக 25 சதவீதம் வாக்குகளை பெறும் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அதுவும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பி உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications