மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம்.. பாஜகவிற்கு அதிகரித்த தோல்வி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்
சென்னை; 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய மொத்த இடங்களில் கிட்டத்தட்ட பாதி இடங்களில் பாஜக அல்லது என்டிஏ வேட்பாளர்கள் தோல்வியடைந்து உள்ளனர்.
164 தொகுதிகளில் பிரதமர் மோடி பொதுக் கூட்டங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தி உள்ளார். அதில் பாஜக/என்டிஏ வேட்பாளர் 77 இடங்களில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்துள்ளனர். மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் 87ல் வெற்றி பெற்று உள்ளனர்.

ராஜஸ்தான் தோல்வி: முக்கியமாக ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில், பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக பேசினார். இங்கே பாஜக கிட்டத்தட்ட 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. காங்கிரஸ் ஆதரவு பாரதிய ஆதிவாசி கட்சி வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள், என்று இங்கே மோடி பேசியது சர்ச்சையான நிலையில் அங்கும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
பஞ்சாப்; பஞ்சாபின் பல்வேறு தொகுதிகளான ஹோஷியார்பூர், ஜலந்தர், குர்தாஸ்பூர், பாட்டியாலா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பல பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினார்.
உத்தரப்பிரதேசத்திலும் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கடுமையாகச் சுருங்கியது . மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் வெறும் 33 இடங்களுக்குக் பாஜக குறைக்கப்பட்டது, சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. உ.பி. முழுவதும் பிரதமர் மோடி பல பேரணிகளை நடத்தினார். காஜிபூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்தார். அங்கே சமாஜ் வாதி கட்சியின் முக்தார் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரியிடம் காஜிபூர் தொகுதியை பாஜக இழந்தது.
இப்படி மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் சில முக்கிய இடங்களை பாஜக இழந்தது. இது போக தமிழ்நாட்டில் மோடி பிரச்சாரம் செய்த அண்ணாமலையின் கோவை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்தது.
உ.பி தவிர, பாஜக மற்றும் என்.டி.ஏவின் மிகப்பெரிய இழப்புகள் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்துள்ளன. அங்கு பிரதமர் மோடி 18 பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்களை நடத்தினார். மகாராஷ்டிராவில், சோலாப்பூர், மாதா, லத்தூர், தாராஷிவ் போன்ற இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். இந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வியடைந்தது.
மோடி பிரச்சாரம் செய்ததில் ஒடிசாவில் மட்டும் 21 இடங்களில் 20ல் பாஜக வென்றது. மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களையும் வென்றது. இந்த இரண்டு மாநிலங்களை தவிர 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய மொத்த இடங்களில் கிட்டத்தட்ட பாதி இடங்களில் பாஜக அல்லது என்டிஏ வேட்பாளர்கள் தோல்வியடைந்து உள்ளனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications