ஏப்ரலில் ஒன்றிணையும் அதிமுக.. நடக்க போகும் இணைப்பு விழா? பாஜக "பிளான்".. இவர் என்ன இப்படி சொல்றாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மோதலை பாஜக ஏப்ரல் மாதம் முடிவிற்கு கொண்டு வந்துவிடும், ஏப்ரலில் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கட்சியை மீண்டும் உருவாக்கி பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவார்கள் என்று அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு விசாரணை வரும் ஜனவரி 4ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை நடக்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உள்ளது. விரைவில் அதிமுக வழக்கில் கிளைமேக்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் அதிமுகவில் என்ன நடக்கிறது.. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்று அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

கேள்வி: ஓபிஎஸ்சை சேர்த்துக்கொள்ள நிர்பந்தித்தால் பாஜகவை விட்டே வெளியே எடப்பாடி தயாராக இருப்பார், சசிகலாவையே சேர்த்துக்கொள்ளாதவர் ஓபிஎஸ்ஸை சேர்க்க மாட்டார், சின்னத்தை முடக்கினால் கூட எடப்பாடி தனியாக நிற்க தயார் என்று எடப்பாடி தரப்பினர் சொல்கிறார்களே?

பதில்: இதெல்லாம் நாடகம். பாஜகவை எதிர்க்கும் தெம்பும், திராணியும் தனக்கு இருக்கிறது என்று மக்களிடம் காட்ட எடப்பாடி நாடகம் போடுகிறார். சசிகலாவை முதல்வராக்க அப்போது முயன்றது இதே அதிமுகவினர் தானே? அப்போது சசிகலாவை முதல்வராக்க விடாமல் தடுத்தது பாஜக தானே? அப்போது பாஜகவிற்கு எதிராக யாரவது போராடினார்களா? அதிமுக பாஜகவை எதிர்த்துவிடுமா? அமலாக்கத்துறை இருப்பதால் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்துகிறது. இவர்கள் எல்லாம் சுயமாக செயல்பட மாட்டார்கள்.

 அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

கேள்வி: அமலாக்கத்துறை இருந்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் பாஜகவை எதிர்ப்போம் என்று எடப்பாடி தரப்பினர் கூறுகிறார்களே?

பதில்: அதெல்லாம் சும்மா. சின்ன பையன் சவால் விடுவது போல விடுகிறார். சின்ன பையன் மிரட்டுவது போலத்தான் பாஜகவை அதிமுக மிரட்டுகிறது. அதிமுக இப்போது பேசுவது கூட பாஜகவின் அனுமதியோடுதான்.

கேள்வி: இரட்டை இலை சின்னம் ஒருவேளை முடங்கினால், எடப்படியால் அதை சமாளிக்க முடியுமா?

பதில்: இரட்டை இலை என்றால் அதிமுக இல்லை. இரட்டை இலை கட்சி என்றுதான் அதிமுகவிற்கே பெயர். அந்த சின்னம் இல்லை என்றால் கட்சியே இல்லை. இரட்டை இலை இல்லை என்றால் கட்சி காலி. தமிழ்நாட்டை பொறுத்தவரை அமித் ஷா என்ன பிளான் வைத்து இருக்கிறாரோ அதுதான் நடக்கும். தமிழ்நாட்டில் அமித் ஷாவால் தேர்தல் ஆணையத்தை வைத்து வெல்ல முடியாது. அதனால் திமுகவிற்கு ஆதரவாகவே முடிவு வரும்.

தேர்தல்

தேர்தல்

இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நேர்மையாக நடந்தது போல காட்டுகிறார்களே, அப்போதுதான குஜராத் தேர்தலை கேள்வி கேட்க மாட்டார்கள். அதேபோல்தான் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களை வென்றுவிட்டு, மற்ற இடங்களை திமுகவை வெல்ல விட்டுவிடுவார்கள். மற்றபடி திமுகவை வளைத்துக்கொள்வது எல்லாம் பாஜகவிற்கு கஷ்டம் இல்லை. எதிர்காலத்தில் அமலாக்கத்துறை மூலம் திமுகவை பாஜக வளைத்துக்கொள்ளும். தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும், அமலாக்கத்துறையும் பாஜக பக்கம் நிற்கும் வரை பாஜகவை வீழ்த்த முடியாது.

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

கேள்வி: ஒருவேளை எடப்பாடி பாஜக பக்கம் செல்ல மறுத்தால், ஓபிஎஸ், தினகரனை வைத்து பாஜக புதிய கூட்டணி உருவாகுமா?

பதில்: அதெல்லாம் நடக்காது. ஓபிஎஸ், எடப்பாடியை வைத்துக்கொண்டுதான் பாஜக கூட்டணி வைக்கும். தனி தனியாக எல்லோரையும் அழைத்து பாஜக கூட்டணிக்கு பேசுவார்கள். எடப்பாடியை அழைத்து அவருக்கு கொஞ்சம் சீட், ஓபிஎஸ்ஸுக்கு கொஞ்சம் சீட், சசிகலாவிற்கு கொஞ்சம் சீட், தினகரனுக்கு கொஞ்சம் சீட் என்று ஒதுக்கிவிடுவார்கள் பாஜகவினர். இல்லையென்றால் அதிமுகவை ஏப்ரல் மாதம் இணைத்துவிடுவார்கள். ஏப்ரலில் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கட்சியை மீண்டும் உருவாக்கி பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவார்கள். இதன் மூலம் பாஜக + அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை கொண்டு வருவார்கள். அதன்பின் பாஜக வென்றால் அந்த வெற்றியை மக்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். அதிமுக இணைந்துவிட்டதால் பாஜக வென்றுவிட்டது என்பார்கள். இதெல்லாம் நாடகம். மக்களை நம்ப வைக்க நாடகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+