Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்திலும் தாமரை மலருமோ... சட்டசபையில் நுழைய.. பாஜக அதிரடி வியூகம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP Targets Cong Mla's | சட்டசபையில் நுழைய பாஜக அதிரடி வியூகம்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் தாமரையை மலர வைப்பதற்கான அதிரடி வியூகத்தை எந்த நேரத்திலும் பாஜக அரங்கேற்றலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என முழங்கி வருகிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால் கட்டாந்தரையில் எப்படி தாமரை மலரும்? என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏகடியம் பேசி வருகின்றன.

    ஆனால் பாஜக தனது வேலையில் படு சீரியஸாகவே உள்ளது. நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் அரசியல் களத்தில் ஆடுபுலி ஆட்டங்களை நடத்தி கட்டாந்தரையிலும் கூட தாமரை மலரும் என்பதை நிரூபித்து வருகிறது பாஜக. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட தாமரை ஆழவேரூன்றி நிற்கிறது.

    மகாராஷ்டிராவில் பாஜக விளையாட்டு

    மகாராஷ்டிராவில் பாஜக விளையாட்டு

    இந்நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மொத்தமாக வளைத்துப் போட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் சடுகுடு ஆட்டம் ஆடி வருகிறது பாஜக. கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது பாஜக.

    தாவ தயாராக இல்லாத எம்.எல்.ஏக்கள்

    தாவ தயாராக இல்லாத எம்.எல்.ஏக்கள்

    ஆனால் பாஜக இதுவரை கை வைக்காத ஒரே மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஒருசிலர் பாஜகவுக்கு தாவலாமே தவிர மொத்தமாக கூண்டோடு கட்சியையே கைவிட்டு அந்த கட்சிக்குப் போகும் நிலைமை இல்லை.

    தாவ தயாராக இல்லாத எம்.எல்.ஏக்கள்

    தாவ தயாராக இல்லாத எம்.எல்.ஏக்கள்

    ஆனால் பாஜக இதுவரை கை வைக்காத ஒரே மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஒருசிலர் பாஜகவுக்கு தாவலாமே தவிர மொத்தமாக கூண்டோடு கட்சியையே கைவிட்டு அந்த கட்சிக்குப் போகும் நிலைமை இல்லை.

    தமிழக காங். எம்.எல்.ஏக்களுக்கு குறி

    தமிழக காங். எம்.எல்.ஏக்களுக்கு குறி

    தற்போதைய நிலையில் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க இருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ்தான். அந்த கட்சியின் 7 எம்.எல்.ஏக்களில் 5 பேரையாவது ஒட்டுமொத்தமாக வளைத்துப் போட்டால் போதும்.. தமிழக சட்டசபைக்குள் பாஜக அடி எடுத்து வைத்துவிடும்... தமிழகத்திலும் தாமரை மலர்ந்ததாக பாஜகவும் அறிவித்துவிடும்.

    வருகிறது தாமரை புயல்

    வருகிறது தாமரை புயல்

    இதனால் பாஜகவின் தாமரை புயல் எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சியை தாக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது. காரணம் அகில இந்திய அளவில் காங்கிரஸ்தான் படு வீக்காக இருக்கிறது. அதைத்தான் பாஜகவும் குறி வைத்து குதறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காங்கிரஸ் தேசிய தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் விரைவாகவே பாஜக தமது வேட்டையை நிகழ்த்திக் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+