ஜூம் மீட்டிங்கில் பொங்கிய தாரணி.. அந்த "புள்ளியை" தட்டி தூக்க போகும் அமித் ஷா.. ப்பா மாஸ் கிளைமேக்ஸ்
சென்னை: தமிழக காங்கிரசில் நடக்கும் கோஷ்டி மோதலை பயன்படுத்தி அமித் ஷா பல அதிரடிகளை தமிழக அரசியலில் நிகழ்த்த போகிறாராம்.. காங்கிரசில் இருக்கும் சில முக்கிய தலைகளுக்கு வலை விரிக்கும் பிளானில் பாஜக இருக்கிறதாம்!
"சலசல சலசல" இரட்டை கிளவி என்று சொல்வது போலத்தான் தமிழக காங்கிரசும் - கோஷ்டி மோதலும்... இரண்டையும் எந்த கட்டத்திலும் பிரிக்க முடியாது. பல கோஷ்டிகளாக பிரிந்து தங்களுக்கு உள்ளேயே உள்ளடி வேலைகளை செய்வதுதான் தமிழக காங்கிரசில் இத்தனை வருடமாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கிறது.
தேர்தல் நேரத்திலும், ரிசல்ட் வந்த பின்பும் காங்கிரசுக்குள் தானாக கோஷ்டி மோதல் வெடிப்பது வழக்கம். அதே கோஷ்டி மோதல் தற்போதும் வெடித்து உள்ளது. ஆனால் இந்த முறை காங்கிரசுக்கு அது பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

என்ன காரணம்
முக்கியமான தலைவர்களுக்கு சீட் ஒதுக்கவில்லை.. வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று காங்கிரசுக்குள் பலர் பொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாக ஜோதிமணி எம்பி போன்றவர்கள் குற்றஞ்சாட்ட.. தேர்தல் வேலைகளை கவனிக்க ஆட்களே இல்லை என்று எம்பி ப. சிதம்பரம் குமுறி உள்ளார். மொத்தத்தில் காங்கிரஸ் பக்கம் ஆல் இஸ் நாட் வெல்!

பிரிந்து உள்ளார்
தமிழக காங்கிரஸ் மொத்தமும் பல குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டு இருக்கும் போது தென் தமிழகத்திலும் காங்கிரசில் இதேபோன்ற அதிருப்தி காணப்படுகிறது. விளவங்கோடு சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் விஜயதாரணிதான் தற்போது அதிருப்தியில் இருக்கும் அந்த புள்ளி. இவருக்கு தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்குமா என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது.

சந்தேகம்
விஜயதாரணிக்கு சீட் கொடுக்க கூடாது .. அவர் கட்சி பணிகளை செய்யவில்லை. நிறைய உள்ளடி வேலைகளை செய்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக காங்கிரசுக்குள் சில நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுதான் தற்போது விஜயதாரணி டென்ஷனில் இருக்க காரணம். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் கன்னியாகுமரி எம்பி சீட் கிடைக்கும் என்று நினைத்தார்.. ஆனால் அது மறைந்த வசந்த குமாருக்கு கொடுக்கப்பட்டது .

கட்சி பணிகள்
அந்த தேர்தலிலேயே விஜயதாரணி சரியாக கட்சி பணிகளை செய்யவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் மேலிடம் இவர் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக விளவங்கோடு தொகுதியில் வேறு ஒருவரை நிற்க வைக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் 21 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இன்னும் 4 தொகுதிதான் மீதம் உள்ளது.

விளவங்கோடு
இதில் விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை. விஜயதாரணியை தேர்வு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருப்பதாலேயே இந்த தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக கட்சியின் ஜும் மீட்டிங் ஒன்றிலும் விஜயதாரணி உருக்கமாக பேசி இருக்கிறாராம்.. கட்சிக்காகவும் , மக்களுக்காகவும் அவ்வளவு பணிகளை செய்து இருக்கிறேன் .. ஆனால் எனக்கே எதிராக சிலர் அரசியல் செய்கிறார்கள்.. நான் உழைத்து இருக்கிறேன்.. எனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று மீட்டிங் ஒன்றில் பேசி இருக்கிறார்.

அமித் ஷா நேரம்
இந்த நிலையில் காங்கிரசுக்குள் நடக்கும் இந்த மோதலை அமித் ஷா உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறாராம். ஒருவேளை விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவரை பாஜக பக்கம் இழுக்கும் திட்டத்தில் அமித் ஷா இருக்கிறாராம். இதனால்தான் நேற்று பாஜகவின் வேட்பளார் பட்டியலில் விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் விஜயதாரணியை பாஜக இறக்கும் பிளானும் இருக்கிறதாம்.

சிக்னல்
ஒருவேளை விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் அதை பயன்படுத்தி அவரை பாஜகவிற்கு இழுப்பதற்கான திட்டங்களும் நடந்து கொண்டு இருக்கிறதாம். விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாதது இதற்கான வெளிப்படையான சிக்னல் என்கிறார்கள். காங்கிரஸ் இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால்.. அமித் ஷா உள்ளே புகுந்து கிளைமேக்ஸை மாற்றுவார் என்று பேசிக்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications