இடுப்பில் மண்சட்டி.. தலையில் கொசுவலை.. ஜெயக்குமாரிடம் நூதன மனு அளித்த பாஜக மகளிர் அணி தலைவி
அமைச்சர் ஜெயக்குமாரிடம் பாஜக பெண் தலைவர் மனு அளித்துள்ளார்
சென்னை: இடுப்பில் மண்சட்டி, தலையில் கொசுவலையை போர்த்தியபடியே அமைச்சர் ஜெயக்குமாரிடம் வந்து மனு அளித்த பாஜக மகளிர் அணி தலைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பொதுமக்களிடம் மனுக்களை வழங்கி கொண்டிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து, இடுப்பில் மண்சட்டியை வைத்து கொண்டும், தலையில் கொசுவலையை போர்த்திக்கொண்டும் ஒருவர் கையில் மனுவுடன் வந்தார்.
அவர் பெயர் அம்சவேணி... திருவொற்றியூர் நகர பா.ஜனதா மகளிர் அணி தலைவியாக உள்ளார். மனுவை கொடுத்ததும், அமைச்சர் அதனை வாங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்.
பின்னர் இதை பற்றி அம்சவேணி சொல்லும்போது, "நான் வசிக்கிற 6-வது வார்டு திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் கொசு தொல்லை ரொம்ப அதிகமாக இருக்கு. குடிநீர் பிரச்சனையும் அதிகமாக இருக்கு.
பலமுறை மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால அதிகாரிகள் அலட்சிய போக்கை கண்டிப்பதற்காகவே இப்படி கொசுவலையை தலையில் போர்த்திக்கொண்டும், இடுப்பில் மண்சட்டியை வைத்துக்கொண்டும் புகார் மனு கொடுத்தேன்" என்றார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications