மதநல்லிணக்கம் பேசும் முதல்வர்..இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை.. நயினார் நாகேந்திரன் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஏஏ சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக வெளிநடப்பு செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மத நல்லிணக்கம் பற்றிப் பேசும் முதல்வர், இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என விமர்சித்துள்ளார்

மத்திய அரசு கடந்த 2019இல் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினராக உள்ளவர்கள் இந்தியாவில் எளிதில் குடியுரிமை பெறலாம்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாத நிலையை இந்தச் சட்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. அதேபோல இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.

சிஏஏ எதிராகத் தீர்மானம்

சிஏஏ எதிராகத் தீர்மானம்

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த சிஏஏ சட்டம் நாட்டின்‌ அரசியலமைப்பு சட்டத்தில்‌ கூறப்பட்டுள்ள மதச்‌ சார்ப்பின்மை கோட்பாட்டிற்கு உகந்ததில்லை. மேலும், நம்‌ நாட்டில்‌ இருக்கும் மத நல்லிணக்கத்திற்கும்‌ இது கெடுக்கும் வகையில் உள்ளது.

அதிமுக வெளிநடப்பு

அதிமுக வெளிநடப்பு

மக்களாட்சித்‌ தத்துவத்தின்படி ஒரு நாட்டின்‌ நிர்வாகம்‌ அனைத்து மக்களின்‌ கருத்துகளை உள்ளடக்கி அமைந்திருக்க வேண்டும். ஆனால்‌, இந்த சிஏஏ சட்டம், அகதிகளை அரவணைக்காமல்‌, மத ரீதியாகப் பாகுபடுத்திப்‌ பார்க்கிறது. எனவே ஒன்றிய அரசின்‌ இந்தியக் குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்த பேரவை வலியுறுத்துகிறது" என்றார். முன்னதாக இன்று காலை சட்டசபை கூடிய போதே, தங்கள் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கத் தைரியம் இல்லாமலேயே அதிமுக வெளிநடப்பு செய்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.

பாஜக வெளிநடப்பு

பாஜக வெளிநடப்பு

பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் சிஏஏ-க்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், "தமிழ்நாடு முதல்வர் சிஏஏ சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார், அவர் கொண்டு வந்த அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

முதல்வர் வாழ்த்து கூறுவதில்லை

முதல்வர் வாழ்த்து கூறுவதில்லை

தமிழ்நாடு முதல்வர் மத நல்லிணக்கம் குறித்துப் பேசியுள்ளார். சிஏஏ சட்டத்தால் இந்தியாவிலுள்ள எந்தவொரு இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு இல்லை. இதைத் தான் நான் சட்டசபையிலும் கூறினேன். இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தவொரு கருத்தும் இல்லை. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்து மத பண்டிகைக்குத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் மட்டும் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் அவர் தான் இன்று மத நல்லிணக்கம் பற்றிப் பேசி உள்ளார்.

மத்திய அரசுக்கு உரிமை உள்ளது

மத்திய அரசுக்கு உரிமை உள்ளது

மத்திய அரசு தினமும் நாட்டின் நலம், பாதுகாப்பு கருதியே பாடுபட்டு கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்திற்கு எதிராக நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். நாட்டின் நலம், பாதுகாப்பு கருதியே எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+