மெகா ட்விஸ்ட்! சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கிறோம்.. சட்டசபையில் பாஜக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சென்னை: சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் இன்று அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்து உள்ளார். அவரின் தனி தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.
கடலுக்கு அடியில் ராமர் பாலமே இல்லை என நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்தே இன்று தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இந்த திட்டத்தை பாஜக சட்டசபையில் கடுமையாக எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அவையில் இருந்து வெளிநடப்பு கூட செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

திட்டம் ஆதரவு
இன்று திட்டத்தை ஆதரித்து சட்டசபையில் பேசிய நயினார் நாகேந்திரன், ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். அப்படி இருக்கும் போது ராமாயணம் கற்பனை என்றெல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. ராமர் பாலம் கட்டினாரா என்று தெரியாது.. இது தெய்வ நம்பிக்கை தொடர்பானது. இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். சேது சமுத்திர திட்டம் வந்தால் உண்மையில் நான்தான் மகிழ்ச்சி அடைவேன். நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். தென் மண்டலம் இதனால் வேகமாக வளர்ச்சி அடையும்.

கடல் வழி
தென் மண்டலத்தில் கடல் வழி போக்குவரத்து எளிமையாக்கும். இதனால் தென் மண்டலம் வளம் பெறும். அதனால் இந்த திட்டத்தால் அதிகம் சந்தோசம் அடையும் நபராக நான்தான் இருப்பேன். முதலில் வாஜ்பாய் காலத்தில் இதற்காக சோதனைகள் செய்யப்பட்டன. இங்கே பெரிய டீம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டது. அதன்பின் மன்மோகன் சிங் காலத்தில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆதரவு
கருணாநிதி இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த திட்டம் பற்றி பேசி வந்தார். ஆனால் இந்த பகுதி ஆழம் இல்லாத பகுதி. இங்கே மண் எடுக்க எடுக்க மண் சரியும். இதனால் இங்கே கட்டுமானம் செய்வது மிகவும் கடினம். இங்கே பெரிய ஆழம் இல்லை. பக்கத்திலேயே மண்டபம் இருக்கிறது. அதனால் இங்கே போக்குவரத்து மிகவும் கடினம். அதேபோல் இது தெய்வமாகி மதிக்கப்படும் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம். அதை எல்லாம் நினைவில் வைத்து இங்கே கட்டுமானத்தை தொடங்க வேண்டும்.

கட்டுமானம்
இந்த திட்டத்தை கொண்டு வந்தால் எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடையமாட்டார்கள். ராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதற்கு பாஜக ஆதரவு தரும். இங்கே இருக்கும் கட்டுமான பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். முறையாக ஆய்வு செய்த பின்பே இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம். அதனால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications