வானதி இப்படி சொன்னதுமே.. குபீர்னு சிரித்த அவை.. டக்குனு எழுந்த பிடிஆர்.. பதில் தந்த சபாநாயகர்
பாஜகவின் வானதி சீனிவாசன் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது
சென்னை: சபாநாயகர் அப்பாவு, சித்திரகுப்தன் போல் செயல்பட வேண்டும் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியதால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சபாநாயகர் அப்பாவு மீது நிறைய மரியாதையை வைத்திருப்பவர் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.. சில தினங்களுக்கு முன்பு, பேரவையில் முதல் முதலாக உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு "கன்னி" என்கிற சொல்லாக குறிப்பிடப்பட்டது.. அதற்கு வானதி சீனிவாசன், இளம் வயது பெண்ணைக் குறிக்கும் வார்த்தைதான் கன்னி.. என்னைப் பொருத்தவரை அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரிகமாக இருக்கும்' என்றார்.

வானதி
வானதியின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, வானதியின் பேச்சு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.. அப்போது வானதி, "சபாநாயகரே.. நீங்களும் நானும் எத்தனையோ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விவாதித்துள்ளோம்" என்றார். அதற்கு மறுபடியும் பதிலளித்த சபாநாயகர், "ஆமாம்.. நிச்சயமாக, உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை முறைப்படி சட்டப்பேரவையில் கொடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்..

பதில்
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில்துறை மீதான விவாதம் நடைபெற்றது.. இந்த விவாதத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பேசினார்.. அப்போது மானிய கோரிக்கை தொடர்பாக இல்லாமல், பொது விவகாரம் பலவற்றை குறிப்பிட்டு வானதி பேச்சை ஆரம்பித்தார்.. இதை கவனித்த சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, இன்று தாக்கல் செய்த மானிய கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசவேண்டும் என்றார்... உங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசிவருகிறீர்கள்.. சீக்கிரமாக பேசி முடியுங்கள்" என்றார்.

சிரிப்பலை
இதை கேட்ட வானதி சீனிவாசன், "சபாநாயகர் அப்பாவு, சித்திரகுப்தன் போல் செயல்பட வேண்டும், அவர் அவர் பேசும் நேரத்தை அவர் அவர் கணக்கில் வைக்க வேண்டும்... அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்த நேரத்தை என் கணக்கில் சேர்க்க கூடாது" என்றார்.. வானதி இப்படி சொன்னதுமே பேரவையில் சிரிப்பலை குபீர் என எழுந்தது..

பிடிஆர்
அப்போது நிதித்துறை அமைச்சர் பிடிஆர் திடீரென எழுந்தார்.. "கடந்த ஆட்சி காலத்தில் எம்எல்ஏக்கள் பேசும் போது அமைச்சர்கள் யாராவது குறுக்கிட்டால், அவர்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரமும் உறுப்பினர் பேசும் நேரத்தில்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டது.. அதனால், தனி ஒரு உறுப்பினருக்காக விதியை எல்லாம் மாற்ற முடியாது" என்றார்.

பதில்
இதை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "கடந்த ஆட்சி போல் இல்லாமல் ஜனநாயகப்படி பேரவையை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான், இந்த அவை நடத்தப்பட்டு வருகிறது.. அதனால் தான் தங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications