சிக்கிமில் சீரியஸாக கட்சிப் பணி- திமுகவுக்கு போறதா கிளப்பிவிடுறாங்களே.. கொந்தளிக்கும் வானதி கோஷ்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவை மையமாக வைத்துதான் செய்திகள் உலாவ வேண்டும் என்கிற அளவுக்கு ஒவ்வொரு நாளும் பகீர் பகீர் பரபரப்புகள் கிளப்பிவிடப்படுகின்றன. இந்த பட்டியலில் இப்போது தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சேர்க்கப்பட்டிருக்கிறார். வானதி சீனிவாசன் திமுகவுக்குப் போகப் போகிறார்; அமைச்சராகப் போகிறார் என கிளப்பிவிடப்பட்ட வழக்கமான சமூக வலைதள தகவல்கள்தான் இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது.

BJP MLA Vanathi Srinivasan supporters deny to join DMK

கோவை உலியம்பாளையம் எனும் குக்கிராமத்தில் பிறந்து இன்று மத்தியில் ஆளும் பாஜக எனும் தேசிய கட்சியின் மகளிர் அணி தலைவராக உயர்ந்திருக்கிறார் வானதி சீனிவாசன். 1980களின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகனின் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றியவர். பாஜகவின் மாணவர் அமைப்பின் மாநில துணை செயலராக இருந்தார்; மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் ஜூனியரான சீனிவாசன், வடதமிழக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செய்லராக இருந்தார். அவரை திருமணம் செய்து கொண்டார் வானதி.

தமிழக பாஜகவில் பொதுச்செயலாளர், துணைத் தலைவர், செயலாளர், மகளிர் அணி பொதுச்செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். தற்போது பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவர் பதவியை எட்டிப் பிடித்திருக்கிறார். இந்த பதவியின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு வருகிறார் வானதி சீனிவாசன்.

தற்போது சிக்கிமில் முகாமிட்டுள்ளார் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இன்று சிக்கிமில், பாஜகவின் மாநில செயலாளர் மற்றும் நுமலிங்கா ரிஃபைனரி லிமிடெட் இயக்குனர் சுதீப் பிரதானை தாம் சந்தித்து பேசியதாக சமூக வலைதளங்களில் வானதி சீனிவாசன் பதிவிட்டும் இருக்கிறார். சிக்கிமில் சீரியசாக கட்சிப் பணியாற்றி வரும் நிலையில், வானதி சீனிவாசன் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் யூகமான பதிவுகளை வெளியிட்டிருந்தனர். அந்தப் பதிவுகளே இப்போது செய்தியாக உருவெடுத்திருக்கிறது. அதாவது வானதி சீனிவாசன், ஆளும் திமுகவுக்கு தாவப் போகிறார் என்றும் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்பதுதாம் அந்த செய்தி. ஆனால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் போன்றவர்கள், இது வானதி எதிர்கோஷ்டியின் திட்டமிட்ட சதி; பொய்ச்செய்தி; சீனியர்களை துரத்துகிற முயற்சி என கொந்தளிக்கிறார்.

BJP MLA Vanathi Srinivasan supporters deny to join DMK

இது தொடர்பாக நாம் விசாரித்த போது, கடந்த அதிமுக ஆட்சியில் ஆளும் தரப்புடன் மிக நெருக்கமாக இருந்தவர்தான் வானதி. அப்போதே அதிமுகவின் பி டீம் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வானதி வெற்றி பெற்றதில் அதிமுக முக்கிய புள்ளிகளின் ரோல் மிக முக்கியமானது. அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு டெல்லியில் பாதுகாப்பு பெற காரணமாக இருந்தார் என்பதாலேயே இப்படியாக களப்பணி செய்தனர் என்கிற பேச்சும் உண்டு. அடிப்படையில் இந்துத்துவா சித்தாந்தவாதி; திராவிடர் இயக்க எதிர்ப்பாளர். குடும்பமே இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் என்பதால் அப்படி எல்லாம் பாஜகவில் இருந்து விலகிவிடமாட்டார் என்கின்றனர்.

மேலும், தமிழக பாஜக தலைமையானது வானதி சீனிவாசனை ஓரம் கட்டுவதில் எப்போதும் தீவிரம் காட்டுவதை அவரது ஆதரவு டீம் உணராமலும் இல்லை. செங்கல்பட்டில் பாஜக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. அப்போது வானதி சீனிவாசன், மகளிர் அணி தலைவர் என்ற அடிப்படையில் ஒரு மாநில தலைவர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது. அதை மாநில தலைமை ரசிக்கவில்லை. அதற்கு முன்னதாக கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் போது, பந்த் அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மாநில தலைமை ஒதுங்கிக் கொண்டது. இப்படியான அடுத்தடுத்த நிகழ்வுகள் மாநிலத் தலைமையுடன் மோதும் நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால்தான் மோதல்களைத் தவிர்க்க மகளிர் அணி தலைவர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமாக செல்வது; பிற மாநில தேர்தல்களில் தீவிர பிரசாரம் செய்வது என படுபிஸியாக வைத்திருக்கிறார் வானதி சீனிவாசன் என்கின்றன கோவை வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+