கனல் கண்ணனுக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில் 23 பேர் பங்கேற்பு!
சென்னை : கனல் கண்ணன் கைதைக் கண்டித்து சென்னையில் இந்து முன்னணி, பாஜக நடத்திய போராட்டத்தில் 30க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றது ட்விட்டரில் கிண்டலுக்குள்ளாகி வருகிறது 'கூட்டம் என்ன மாநாடு மாதிரி அள்ளுது' என நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
மதுரவாயலில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைக் கூறி இருந்தார்.
இதையடுத்து அவர் மீதான புகாரின் பேரில் போலீசார் கனல் கண்ணனை வலைவீசித் தேடி வந்தனர். நேற்று புதுச்சேரியில் வைத்து கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி ஆகிய கட்சியினர் இன்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெரியார் சிலை பற்றி சர்ச்சை பேச்சு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலை குறித்து திரைப்பட நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமன கனல் கண்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து முன்னணி அமைப்பில் நிர்வாகியாக இருக்கும் கனல் கண்ணன், "ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே இருக்கின்ற கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

கனல் கண்ணன் மீது புகார்
கனல் கண்ணனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இந்தப் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கனல் கண்ணன் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால், அவர் தலைமறைவானார்.

கைது
இந்நிலையில், சென்னை மற்றும் புதுச்சேரியில் தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கனல் கண்ணனை வலைவீசித் தேடி வந்தனர். இதற்கிடையே ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கனல் கண்ணனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நேற்று காலை புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பாஜகவினர் எதிர்ப்பு
கனல் கண்ணன் கைதுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலில் சிவபெருமானை, நடராஜரை அவமானப்படுத்துகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள இந்த திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாகக் கருத்துச் சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டார்கள்." எனச் சாடியிருந்தார்.

போராட்டம்
கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினரும் இந்து முன்னணியோடு இணைந்து கனல் கண்ணன் கைதுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

23 பேர் போராட்டம்
சென்னையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களையும் சேர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டுள்ளனர். நாராயணன் திருப்பதி ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

வக்கீல்களே அவ்வளவு பேர்
முன்னதாக, கனல் கண்ணணின் முன் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே கனல் கண்ணன் தரப்பில் இருந்து இந்து முன்னணி சார்பாக 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் களமிறங்கினர். ஆனால், ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இன்று அதே எண்ணிக்கையிலான தொண்டர்களோடு கனல் கண்ணன் கைதுக்கு எதிராக ‘மாபெரும்' போராட்டம் நடத்தியுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications