இந்துக்கள் மீதான வெறுப்பின் உச்சம்.. நடராஜர் கோயிலில் தீண்டாமை சுவரா? திருமாவளவனுக்கு நாராயணன் பதில்
சென்னை: பட்டியலினத்தவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பிய திருமாவளவனுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம். இங்கு இன்று நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். குருபூஜை முடிந்தபிறகு அங்கு 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

நநந்தனார் பிறந்த ஆதனூரில் 100 பட்டியல் இனத்தவர்களுக்கு பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் ரவி, இது மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு செய்வதாகும், இதுதான் சனாதனம். பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிந்த ஆதி திராவிடர்களை கோயில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலை ஆளுநர் திறந்து விட வேண்டுகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது X (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரை தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளது மீண்டும் ஒரு கட்டுக் கதையினை சொல்லி மக்களை குழப்பும் இந்து விரோத செயலே.
நந்தன் வழிபட்டது திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில் என்பது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் வழிபட்டது போன்ற மாயையை உருவாக்குவதும், அங்கு திருப்பணி முடிந்து அமைக்கப்பட்ட சுவரை தீண்டாமை சுவர் என்று வதந்தியை பரப்புவது மலிவான அரசியல் மட்டுமல்ல, ஹிந்துக்களின் மீதான வெறுப்பின் உச்சம்.
தொடர்ந்து இந்து மத இதிகாசங்களை பரிகாசம் செய்வது, அவமானப்படுத்துவது, ஆங்கிலேயர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதிய நூல்களை 'மனு ஸ்ம்ரிதி' என்று பொய் சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவது என்று இல்லாததை இருப்பது போல் சொல்லி மக்களை தூண்டி விட்டதை போல் நந்தனார் விவகாரத்தில் திருப்புன்கூர் கிராமத்தில் வழிபட்டதை சிதம்பரம் என்று பொய் சொல்லி தூண்டி விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில் திருமாவளவன் ஈடுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications