ஷாக்கிங்.. பிரதமரை களவாணி என்று விளித்த ஸ்டாலின்.. புறம்போக்கு என திட்டிய பாஜக நாராயணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை புறம்போக்கு, துரோகி, முட்டாள், உளவாளி என மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் பாஜகவின் நாராயணன். பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

"பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல... களவாணி.." என்று திமுக தல்லைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இது பாஜக தலைவர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்திருக்கிறது.

BJP Narayanan slams MK Stalin Rahul

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவின் நாராயணன உள்ளிட்டோர் காலை முதல் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் நாராயணன் மிக கடுமையாக வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.

அவர் தமது பதிவில், "ஸ்டாலின் தளபதி அல்ல. தமிழகத்தை காட்டி கொடுக்கும் துரோகி"; பிரதமர் மோடி நாட்டின் களவாணி.. என்பதை புறம்போக்கு சொல்லத் தேவையில்லை" திமுகவே உண்மையான காவலாளி : ஸ்டாலின். காவலாளி அல்ல உளவாளி என சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

அதேபோல் "அரசு ஆவணங்களை எரித்தாலும் பிரதமர் மோடியால் தப்பிக்க முடியாது!" : சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீவிபத்தை சுட்டிக்காட்டி, ராகுல் என குறிப்பிட்டு\"ஒரு முட்டாளின் மூடத்தனமான அறிக்கை" எனவும் பதிவிட்டுள்ளார் நாராயணன். இந்த பதிவுகளுக்கு திமுக, காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இதனால் நாராயணனின் ட்விட்டர் பக்கமே நாறிப் போய்க் காணப்படுகிறது.

அரசியல் வர வர இப்படியாகி விட்டதே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+