நில பத்திரத்தை தானே கொடுத்துவிட்டு.. இப்போ ஏமாத்திட்டாங்கன்னா பாஜக என்ன செய்யும்? கவுதமிக்கு கேள்வி
சென்னை: பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவரிடம் சொத்தை தானே ஒப்படைத்ததாக கௌதமி கூறிய நிலையில் இந்த தனிப்பட்ட விவகாரத்தில் கட்சி எப்படி தலையிடும் என தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜக விலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, இந்த விவகாரத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது முரண். அந்த நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் எப்படி கட்சி தலையிட முடியும்? மேலும் சில மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி புரிவதாக சொல்வதும் முறையல்ல என எண்ணுகிறேன். அப்படி யாராவது உண்மைக்கு எதிராக துணை நிற்பதாக கௌதமி அவர்கள் நிரூபித்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுக்க தயார்.

கௌதமி நீண்ட நாட்களாக கட்சியில் உள்ளார், அவர் மூலம் தான் அழகப்பனுக்கு பாஜகவில் உள்ள சிலருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படியானால், அவர் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல முடியும் என்று புரியவில்லை. ஒரு வேளை, யாரேனும் கௌதமி ஏமாற்றப்பட்டது தெரிந்து அவருக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இருந்தால், வெளிப்படையாக கட்சியின் தலைவர்களிடம் கூறியிருக்கலாம். மேலும் ராஜபாளையம் தொகுதியில் கடைசி நிமிடத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது. கடைசி நிமிடத்தில் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே, அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது என்பதையும், கூட்டணி காரணமாக அந்த தொகுதியில் போட்டியிட முடியாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தெரிகிறது.
ஆகவே, அவருடைய பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, அவரே அவரின் பிரச்சினைகளை வரவழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அவர் தன்னை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். காவல் துறை விரைவாக குற்றச்சாட்டுக்கு ஆளான அழகப்பனை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கௌதமிக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய நாம் தயாராய் உள்ளோம். உணர்ச்சி வசப்பட்டு கௌதமி கட்சியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவிலிருந்து பின் வாங்கினால் மகிழ்ச்சி. இல்லையேல் அது அவரின் தனிப்பட்ட தவறான முடிவு.
கௌதமி நல்லவர். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டது கட்சியினாலோ, கட்சியினராலோ அல்ல. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும். அவரின் பிரச்சினைகள் விரைவில் தீரட்டும். இவ்வாறு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!











Click it and Unblock the Notifications