ரஞ்சனா நாச்சியாருக்கு ஒரு சட்டம்.. திமுக எம்எல்ஏ எழிலரசனுக்கு ஒரு சட்டமா? பாஜக சீனியர் கேள்வி
சென்னை: நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு ஒரு சட்டம், திமுக எம்எல்ஏவுக்கு ஒரு சட்டமா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஞ்சனா நாச்சியார் என்பவர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் சமுதாய அக்கறையோடு செய்யப்பட்டவையாக தான் கருதப்பட வேண்டும்.

அவரின் கடின வார்த்தைகள் தவறு தான், ஆனால் அந்த வார்த்தைகள் அந்த நேரத்திற்கான தவிர்க்க முடியாத தேவை தான் என கருதுகிறேன். மாணவர்களை கை நீட்டி அடித்தது சட்டப்படி குற்றம் தான். ஆனால், அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் நிகழ்ந்தது என்பதை சிறு குழந்தை கூட சொல்லும். நடத்துனரை ஒருமையில் பேசியது சட்ட விரோதமாக இருந்தாலும், அரசு ஊழியர்களின் அலட்சியத்தை தட்டி கேட்காத அதிகாரிகளின் பொறுப்பின்மையினால் எழுந்த கோபம் என்றே எடுத்து கொள்ளபட வேண்டும்.
அவர் விளம்பரத்திற்காக அதை செய்திருந்தாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அதை வரவேற்பதில் தவறில்லை. அரசின் அலட்சியத்தை, அதிகாரிகளின் மெத்தனத்தை வெளிக்கொண்டு வந்ததால் அது குற்றமில்லை என கருதப்படலாம். ஆனால், அதையெல்லாம் மீறி, வழக்கு தொடர்ந்து கைது செய்தே தீர வேண்டும் என்று அரசு நினைத்தால் சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும்.
ஆனால், சமூக அவலத்தை கண்டித்த ரஞ்சனா நாச்சியாரை கைது செய்த தமிழக காவல்துறை, பொதுமக்கள் முன்னிலையில் நமது பிரதமரை தரக்குறைவாக பேசிய, ஒருமையில் விமர்சித்த திமுகவின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை கைது செய்யாதது ஏன்? சட்டமன்ற உறுப்பினர் சட்டத்தை மீறலாமா? தரக்குறைவாக பேசலாமா? அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்காதா? சிறைக்கதவுகள் அவருக்கு திறக்காதா? அரசு இயங்காதா? யார் தவறு செய்தாலும் தண்டிப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அந்த அரசை பொறுப்பேற்று நடத்தும் முதல்வருக்கு பெருமை. சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கைது செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications