திமுகவை மீண்டும் சீண்டும் பாஜக.. அடுத்தடுத்த 2 பிரச்சனைகள்.. முதல்வருக்கு பறந்த கோரிக்கை.. என்னாச்சு?
சென்னை: திமுகவை இரு வேறு பிரச்சினைகளில் பாஜக தொடர்ந்து சீண்டி கொண்டே வருகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.
கடந்த ஏப்ரல், 31 அன்று கடலூர் அடுத்த வெள்ளக்கரை வே. காட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக்குள் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் எட்டு பேர் காயமடைந்தனர். கடந்த ஜூலை 12ம் தேதி கடலூர் மாவட்டம் திருத்துறையூர் அரசு மேல் நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் ஊர் தகராறாக மாறி கடும் மோதலில் முடிந்தது.

கடலூர் மாவட்டம்
தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களுக்கிடையே சாதிய உணர்வும், வன்முறை எண்ணமும் தலைதூக்குவது நல்லதல்ல. பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் கொடிய சூழ்நிலை அகற்றப்பட வேண்டும்.

மோதல்கள்
நடக்கும் மோதல்கள் அரசு பள்ளிகளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பது ஏன்? முறையான நிர்வாகம், சிறப்பான ஆசிரியர்கள் என்பது தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொடர்ந்து நடைபெறும் இந்த அவலத்தை தடுத்து நிறுத்த தீவிர கவனம் செலுத்தி, திறமையான, அனுபவம் வாய்ந்த நல்லாசிரியர்களை அரசுப்பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும்.

சாதி பதற்றம்
மாவட்ட நிர்வாகம் இப்படிப்பட்ட இடங்களில் சாதி பதற்றத்தை தணிக்க ஆவண செய்ய வேண்டும். நம் அடுத்த தலைமுறை மாணவர்களின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை கல்வி துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் உணர்ந்து மாணவர்களை நல்வழிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

அரசியல் கலப்பில்லாமல்
இதில் அரசியல் கலப்பில்லாது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து 'அரசுப் பள்ளிகளில் தான் பிரச்சினை' என்பதை மனதில் நிறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

திமுக மீது கடும் விமர்சனம்
திமுகவை விமர்சனம் செய்து அவர் இன்னொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் இரண்டாவது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது வன்முறை வெறியாட்டம். சிறையில் கைதியிடம் மொபைல் போனை பறிமுதல் செய்ததால் கடலூர் சிறை அதிகாரி மணிகண்டனின் குடும்பத்தையே கூலிப்படை வாயிலாக கொளுத்த முயற்சித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய நிர்வாக சீர்கேட்டை தடுக்க, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடடுள்ளார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications