மரத்துக்கு கிளை இருக்கு.. இந்துவில் இருக்கக்கூடாதா? சனாதனத்துக்கு பாரதியே சப்போர்ட் - பாஜக நாராயணன்
சென்னை: சனாதன தர்மம் தொடர்பான விவாதங்கள் தற்போது ஓய்ந்து இருக்கும் நிலையில், பாரதியார் 1909 ஆம் ஆண்டில் சனாதனம் குறித்து எழுதியதாக ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "சனாதன தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும், கிளைகளும் சூரிய ஜோதியிலே காணப்படும் ஏழுவகை வர்ணங்களைப்போல அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களாகுமேயல்லாமல், குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமது அழிவுக்கு கருவிகளாக மாட்டா.

அடடா! இந்த ஹிந்துக்களிலே வைஷ்ணவன், சைவன், அத்துவைதி, சாக்தன் முதலிய எத்தனை கிளைகள்! இவர்கள் எப்படி விளங்கப் போகிறார்கள்? என்று கூறி சிரிப்பவர்கள் நமது தேச சரித்திர மட்டுமேயன்றி வேறெந்த நாட்டு சரித்திரமும் அறியாதவர்கள். இவர்கள் சனாதன தர்மத்தின் இயல்பை மட்டுமேயன்றி வேறெந்த மதத்தின் இயல்பையும் அறியாதவர்கள்.
மனித அறிவானால் ஆச்ரயிக்கப்பட்டுவரும் எந்த மார்க்கத்திலும் ஆயிரக்கணக்கான கிளைகள் இருத்தல் அத்யாவசியம் என்ற சாதாரண உண்மை இந்த குழந்தைகளுக்கு தெரியாது. உயிர்த்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல கிளையுடைமை ஒரு லட்சணம். உயிரடனிருக்கும் ஒரு மனிதனுக்குப் பலவகைப்பட்ட அவயவங்கள் இருந்து பலவகைத் தொழில்கள் நடத்துவதை பார்த்து இக்குழந்தைகள் யோசனை செய்யவில்லை.
உயிருடன் இருக்கும் ஒரு மரத்திற்குப் பல மலர்களும், கிளைகளும், கொம்புகளும் இருப்பதைக் கண்டு இவர்கள் சிந்தனை செய்தது கிடையாது. வெட்டுண்டு கிடக்கும் செத்த மரக்கட்டை தான் எப்போதும் ஒரே ரூபமுள்ளதாய், பல கிளைகளற்றதாய் இருக்கும். அந்த மரக்கட்டை போல நமது பாரத ஜாதியும், சனாதன தர்மம் ஆகி விடவில்லையென்று விசனமடைவோரைப் பார்க்கும் போது, சங்கீத வித்வானைப் பார்த்து அழத் தொடங்கிய ஆட்டிடையன் கதை ஞாபகத்திற்கு வருகின்றது.
பௌத்தம், கிருஸ்துவம் முதலிய யாதேனும் ஓர் மார்கத்தைப் பற்றிய பழக்கம் இருந்தால் இவர்கள் நமது சனாதன தர்மத்தில் கிளைகள் இருப்பது பற்றி குறை சொல்ல வரமாட்டார்கள். ஐயோ! சனாதன கர்பத்திலே பல வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி நிந்தனை செய்ய வரும் இவர்கள், அந்த வகுப்புகளின் யதார்த்த ரூபத்தையும், குணத்தையும், தொழிலையும் பற்றி ஒரு க்ஷணமேனும் ஆலோசனை செய்திருக்கிறார்களா?
சக்தி மார்க்கம், கிருஷ்ண பத்தி, சிவயோகம், பிரம்மானுபவம் என்பனவற்றில் எதைக் கொய்தெறிந்து விடலாமென்று இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்? அழகிய ஜீவ விருக்ஷத்திலே பசுமை வாய்ந்த இலைகளையா? இனிய தோற்றமுடைய நறுமலர்களையா? கனிகளையா? எந்த பகுதியை நாசம் செய்ய சொல்லுகிறார்கள்?
சனாதன தர்மம் ஒன்று. பரஸ்பர சஹோதரத்துவமுடைய பல கிளைகள் கொண்ட ஒரு பொருள். நம்முள்ளே பொது நலத்திற்கு விரோதமான வேற்றுமைகளை அவரவர்கள் கண்டா இடத்தில் நீக்கிக் கொள்ள வேண்டுமேயல்லாது நமது பொது நாள்ச செய்திகளைக் காட்டிலும் வேற்றுமைச் செய்திகள் வெகு முக்கியம் போல பின்னவற்றையே பிரமாதமாக முரசொலியுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாகாது.
புதுவை "இந்தியா", 1909 ம் ஆண்டு, செப்டம்பர் 4 இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். 124 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பாரதியாரின் சிந்தனைகள் இன்றைக்கும் சிலருக்கு அறிவுரையாக பயன்படுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications