நாங்க காக்கா கூட்டமா? எங்களை பார்த்து அதிமுகவுக்கு பயம்.. செல்லூர் ராஜு கருத்துக்கு பாஜக நாராயணன் பதில்
சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு இணையாக பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இந்த அளவுக்கு வளரவில்லை என்பதால் அச்சத்தின் காரணமாகவே அதிமுக விமர்சனம் செய்து வருவதாக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக கூட்டம் காக்கை கூட்டத்தை போன்றது என்றும் இரை போட்டால் வரும், அவை தீர்ந்துவிட்டால் காக்கைகள் பறந்துவிடும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தமிழகத்தில் பாஜக வளரவில்லை என அதிமுக நிர்வாகி பொன்னையன் கூறிய கருத்துக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அது அவருடைய சொந்த கருத்து. கட்சியின் கருத்து அல்ல என கூறிவிட்டார்கள்.

பிரச்சினை முடிவுககு வந்துவிட்டது
இத்துடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜகவை விமர்சித்துள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சப்படுகிறார்கள். அந்த அச்சத்தில் ஒரு நியாயம் இருக்கிறது.

தமிழகத்தில் மாற்று இல்லை
ஏனென்றால் திமுகவும் அதிமுகவும் தமிழகத்தில் இரு பெரிய கட்சிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த பெரிய கட்சிகளுக்கு இணையாக பாஜக வளர்ந்து வருகிறது, அதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைகிறார்கள், பாஜக நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுகிறது என்பதால் தங்களுடைய தொண்டர்களை இழந்து விடுவோமோ என்ற சந்தேகம் என்பது இயற்கையாகவே எல்லாருக்கும் வரக்கூடியதுதான்.

மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் தலைவர்கள் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தங்களுடைய செயல்பாடுகளால் மாவட்ட நிர்வாகியான செல்லூர் ராஜூ போன்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை கொண்டு ஐயம் கொள்வது இயற்கைதான்.

வியப்பில்லை
ஆகவே தமிழகத்தில் இந்த இரு கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியும் வளரவில்லை, அவர்களால் வளரவும் முடியவில்லை. யாராலும் கால் பதிக்க முடியவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது. அதனால் இவர்கள் இப்படி பேசுவதில் எந்த வியப்பும் இல்லை என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications