பரவாயில்லையே! "முதல்வரை ஆதரிக்கவே முடியாதுனு தைரியமாக சொல்லிட்டாரே" கனிமொழி.. பாஜக நாராயணன் பாராட்டு
சென்னை: முதல்வரை ஆதரிக்க முடியாது என திமுக எம்பி கனிமொழி தைரியமாக சொல்லியிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பாராட்டு விழாவில் காசி தமிழ் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என சொல்வதுதான் சரியானது என அவர் சொல்லியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஓரிரு முறை மட்டுமே கூறியிருந்தார். மற்ற இடங்களில் இருந்த Tamilnadu government என்ற சொல்லைவிட்டுவிட்டு this government என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

சலசலப்பு
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல் உள்ளிட்ட வார்த்தைகளும் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகிய பெருந்தலைவர்களின் பெயர்களும் இருந்த 65 ஆவது பத்தியை ஆளுநர் படிக்கவே இல்லை. இதனால் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி அடைந்தார்.

ஆளுநர் முன்னிலையில்
மேலும் ஆளுநர் முன்னிலையிலேயே தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் ஆளுநர் படித்த உரை எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என தீர்மானம் வாசித்த முதல்வர் ஸ்டாலின், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெறும் என அறிவித்தார். இதை அறிந்த ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார்.

தமிழ்நாடு விவகாரம்
இந்த தமிழ்நாடு விவகாரத்தில் திமுகவுக்கும் ஆளுநருக்குமான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசியிருந்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ஆளுநரை ஒருமையில் பேசியிருந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் ஆளுநர் மிக கடுமையான வார்த்தைகளை உபயோகித்து விமர்சித்திருந்தார்.

ஆளுநரை யாரும் விமர்சிக்கக் கூடாது
ஆளுநரை யாரும் விமர்சிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில் இவர்கள் இவ்வாறு பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அண்மையில் நடந்த விழாவில் ஆளுநரை ஒருமையில் பேசியிருந்தார். இதுகுறித்து பாஜக நாராயணன் திருப்பதி விமர்சித்த போது முதல்வராக இருக்கும் தகுதியை ஸ்டாலின் இழந்துவிட்டார் என கூறியிருந்தார்.

மரியாதைக் குறைவாக பேசுவோர்
இந்த நிலையில் மரியாதைக் குறைவாக பேசுபவர்களை திமுக ஆதரிக்காது, ஊக்குவிக்காது என கனிமொழி சொல்லியிருப்பதற்கு ஆளுநரை மரியாதைக் குறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க முடியாது, ஊக்குவிக்க முடியாது என தைரியமாக சொ்கிறாரே! சிறப்பு என பாஜக நாராயணன் திருப்பதி பாராட்டியிருந்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications