நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ.. பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை: நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் தனது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் 3 பேரையும் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராஜீவ் கொலையின் உண்மை குற்றவாளிகள் என யாரையும் சொல்ல முடியாது.
என்னால் காட்டி கொடுக்க முடியாது. காட்டி கொடுக்கும் பழக்கம் எனக்கு இல்லை. காட்டி கொடுத்திருந்தால் 31 வருடங்கள் சிறையில் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.

நாராயணன் திருப்பதி
நளினியின் இந்த பேட்டியை தனது ட்விட்டரில் சுட்டிக் காட்டி பாஜக நாராயணன் திருப்பதி தனது பதிவில் கூறியிருப்பதாவது: நளினி தனது பேட்டி மூலம் கொலை செய்ய சொன்னது யார் என தெரியும். ஆனால், சொல்ல மாட்டேன் என்று தெளிவாக சொல்கிறார். இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், ராஜீவ் காந்தி செத்துட்டாரா? என்று கேட்பாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

பாரத பிரதமர் ராஜீவ் காந்தி
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், முருகன், ரவிசந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை
பின்னர் அவர்களது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்த நிலையில் அவர்களில் பல கட்ட போராட்டத்திற்கு பின்பு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். இவர் விடுவிக்கப்பட்டதன் அடிப்படையில் மற்ற 6 பேரையும் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தது.

நளினி விடுவிப்பு
இந்த நிலையில் நளினியை விடுவித்த சிறைத் துறை நிர்வாகம், மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பயஸும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல மறுக்கிறார்கள். சாந்தன் மட்டும் இலங்கை செல்ல விரும்புகிறார். முருகன் லண்டனில் இருக்கும் தனது மகளுடன் செட்டில் ஆக விரும்புகிறார். இவ்வாறு நளினி தெரிவித்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications