நடிகை ரஞ்சனாவை கைது செஞ்சீங்களே.. பார்த்தீங்களா பையனுக்கு காலே போச்சு -பாயிண்டோடு வந்த பாஜக பிரமுகர்
சென்னை: பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி மாணவனின் கால் துண்டாகி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு ஆதரவாக கருத்திட்டு உள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு பள்ளி மாணவர் சந்தோஷ், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் சென்றபோது தவறி விழுந்து உள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதால் அவரது கால் செயலிழந்தது. இதனால் மருத்துவர்கள் அந்த காலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்திட்டு உள்ள பாஜகவின் நாராயணன் திருப்பதி, “குன்றத்தூர் அரசு பள்ளியில் படித்து வந்த சந்தோஷ் என்ற மாணவன் நேற்று அரசு பஸ் படியில் தொங்கி பயணித்து இருந்து கீழே விழுந்ததால் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் கால்கள் நசுங்கி, செயலிழந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றபட்டன என சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் குன்றத்தூர் அருகே கிருகம்பாக்கத்தில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை கண்டித்ததோடு, அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் எச்சரித்த பாஜகவை சேர்ந்த ரஞ்சனா நாச்சியார் என்ற பெண்மணியை, அவர் யார் கண்டிப்பதற்கு என்று கடுமையாக வசைபாடிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்பார்களா?
அல்லது அந்த பெண்மணியின் சமூக அக்கறையை பாராட்ட மனமில்லாமல், அந்த பெண்மணியை அதிகாலையில் வீட்டிற்கு சென்று கைது செய்த காவல்துறை, கால்களை இழந்த மாணவனின் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்குமா? அல்லது ரஞ்சனா நாச்சியார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளில் மாங்காடு காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்திய தமிழக அரசு இந்த மாணவனின் இழப்பிற்கு பொறுப்பேற்குமா?
விதிமீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களிடையே ஒழுக்கத்தை கொண்டு வர முனைந்த அந்த பெண்மணியின் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்த மாநகர போக்குவரத்து கழகம், அதே விதி மீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இரு கால்களை இழந்த மாணவன் மீது தான் தவறு என்று தப்பிக்க பார்க்குமா? யாருக்கும் வெட்கமில்லை! எதற்கும் கவலையில்லை! எங்கும், எல்லாவற்றிலும் பாழும் அரசியல்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications