ஜி.கே.வாசனுக்கு ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் பாஜக... மத்திய அமைச்சர் பதவி கியாரண்டி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை பாஜகவில் இணைப்பதற்காக அவருக்கு பல ஆஃபர்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மத்திய அமைச்சர் பதவி தருவதற்கு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் கிரீன் சிக்னல் கொடுத்தும் கொள்கை காரணமாக முடிவெடுக்காமல் இருந்து வருகிறார் வாசன்.
இருப்பினும் வாசனை எப்படியாவது பாஜகவில் இணைத்து ப.சிதம்பரத்துக்கு எதிராக தமிழகத்தில் தீவிர அரசியல் செய்து அவரை ஓரங்கட்ட வேண்டும் என்பது டெல்லியின் கணக்காம்.

கருத்துவேறுபாடு
பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய புள்ளியியல் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே ராகுல்காந்தியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி த.மா.கா.வை தொடங்கி நடத்தி வருகிறார்.

சந்திப்பு
பிரதமர் மோடியுடன் மிகவும் நெருக்கம் பாரட்டும் ஜி.கே.வாசன் அண்மையில் கூட அவரை டெல்லியில் சந்தித்து பேசினார். அதோடு மட்டுமல்லாமல் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போதே உங்களுக்கான மரியாதையும், முக்கியத்துவமும் தங்கள் தரப்பிலிருந்து நிச்சயம் கிடைக்கும் எனக் கூறிய அவர்கள் சூசகமாக அழைப்பும் விடுத்தனர்.

இணைப்பில்லை
மேலும், அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாசன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறி சமாளித்தார். த.மா.கா.வை பாஜகவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் டெல்லியிலிருந்து இப்போது மீண்டும் அழைப்பு படலம் வலுவாக உள்ளதால் அது தொடர்பாக மிகவும் நெருக்கமானவர்களுடன் மட்டும் வாசன் ஆலோசித்துள்ளார்.

சிதம்பரம் குறி
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியேவந்த பிறகு ப.சிதம்பரம் தீவிர அரசியல் செய்வதை பாஜக ரசிக்கவில்லை. மேலும், அண்மையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் ப.சி. பங்கெடுத்தது பற்றிய தகவலும் டெல்லியை எட்டியுள்ளது. இதனால் அவரை தமிழக அரசியலில் ஓரங்கட்ட வாசன் சரியான தேர்வாக இருப்பார் என்பது பாஜக தேசியத் தலைமையின் நம்பிக்கையாம்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications