இந்தியாவோட அழுத்தத்தால் அபிநந்தன் விடுதலை... சுப.வீ.க்கு டுவிட்டரில் பதிலளித்த ஹெச்.ராஜா
சென்னை: ராஜ்ய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை என்று சுப. வீரபாண்டியனுக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பதில் அளித்துள்ளார்.
உலக நாடுகளே உற்று நோக்கிய அபிநந்தன் விவகாரத்தில்... அவரை விடுவிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். அவரது இந்த ஜனநாயக முடிவுக்கு உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைவர்கள், நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

அபிநந்தனை விடுவிக்க உத்தரவிட்ட இம்ரான் கானை புகழும் வகையில் திராவிட இயக்க தமிழர் பேரவை இயக்கத்தின் சுப. வீரபாண்டியன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
#அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற #இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்?
— SubaVeerapandian (@Suba_Vee) March 1, 2019
அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்? என்று அந்த பதிவில் அவர் கூறியிருந்தார்.
அந்த பதிவுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் இராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலை பார்க்காமல் ஜாதீய பதிவிட்டவர் தானே இவர் https://t.co/mnHhbotLSt
— H Raja (@HRajaBJP) March 1, 2019
அதில் அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் ராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலைப் பார்க்காமல் சாதியப் பதிவிட்டவர் தானே இவர் என்று கூறியிருக்கிறார்.
[Read more: எல்லையில் பதற்றம்... எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றனர்... தமிழிசை வேதனை]
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications