சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் பதற்றம்… எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றனர்... தமிழிசை வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: எல்லையில் பதற்றம் நீடிக்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் அதனை அரசியலாக்குவது வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் திரும்ப முயற்சி எடுத்த மத்திய அரசுக்கும், பிரார்த்தனை செய்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Tension on the border Opposition Parties are politicized says Tamilisai

முன்னதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறிய தமிழிசை, தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் தான் பிரதமருக்கு வைகோ கருப்புக்கொடி காட்டுவதாகவும் விமர்சனம் செய்தார்.

மேலும், அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரம், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் பிரதமரின் தமிழக வருகை சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

[Read more: திரும்ப திரும்ப பேசுற நீ... மீண்டும் வைரலாகும் கோ பேக் மோடி.. தேசிய அளவில் நம்பர் 1!]

இதற்கிடையே, இன்று குமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது.

English summary
Tension on the border: Tamilisai criticism of opposition parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X