Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்ப திரும்ப பேசுற நீ... மீண்டும் வைரலாகும் கோ பேக் மோடி.. தேசிய அளவில் நம்பர் 1!

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை அடுத்த டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை அடுத்த டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்து இருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

இதற்காக குமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் லோக்சபா தேர்தல் தொடர்பாக மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மீண்டும்

மீண்டும்

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை அடுத்து டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் வைரலாகி வருகிறது. மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் இதில் தொடர்ந்து டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் இந்த டேக் பெரிய அளவில் டிரெண்டாகி தேசிய அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

இதோடு நான்காவது முறை

இதோடு நான்காவது முறை

பிரதமர் மோடி தமிழகம் வருவதை அடுத்து இப்படி எதிர்ப்புகள் கிளப்புவது இதோடு நான்காவது முறை ஆகும். மூன்று முறையும் இந்த #GoBackModi ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலையே தேசிய அளவில் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.

இதுவே வழக்கம்

இதுவே வழக்கம்

பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலாவது வழக்கமாகி உள்ளது. திமுக சென்னையில் நடத்திய கருப்பு கொடி போராட்டத்தில் இருந்துதான் இந்த டிரெண்ட் உருவானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் இந்த டேக் வைரலாவது பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதற்கு முன்

இதற்கு முன்

  • இதற்கு முன் மூன்று முறை இந்த டேக் வைரலானது.
  • பிரதமர் மோடி சென்னை வந்த போது - உலக அளவில் நீண்ட நேரம் டிரெண்ட், நம்பர் 1 இடம்.
  • பிரதமர் மோடி மதுரை வந்த போது - உலக அளவில் டிரெண்ட், நம்பர் 3 இடம்.
  • பிரதமர் மோடி திருப்பூர் வந்த போது - உலக அளவில் டிரெண்ட், மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+