இது எப்படி இருக்கு.. பாஜக பால் கனகராஜ் மீது இந்து முன்னணி புகார்.. காரணம் தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ. அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த பால் கனகராஜின் செயலை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் பால் .கனகராஜ். மூத்த வழக்கறிஞருமான இவர் மீது இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பால் கனகராஜ் மீது குற்றச்சாட்டு வைத்து இருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது: "2047 ஆம் ஆண்டில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் எனவும், அதற்கு தடையாக இருக்கும் இந்து தலைவர்களை Eliminate செய்யும் சதித் திட்டத்துடன் செயல்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த இரண்டு வக்கீல்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர்.
ஆனால் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் என்ற அந்த இரண்டு வழக்கறிஞர்களும் இஸ்லாமிய குற்றவாளிகளுக்காக வழக்கில் ஆஜரானார்கள் என்பதால் கைது செய்யப்பட்டது போல் ஒரு தவறான பொய் பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையில் ஒரு சில வக்கீல்களின் ஏற்பாட்டில் கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அந்த வழக்கறிஞர்கள் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இருவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர்களாக செயல்பட்டவர்கள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சதி திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தான் என்.ஐ.ஏஎ அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் தான், பாஜக மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.
அது மட்டும் இன்றி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து, முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்துள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரானதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பொய்யான தகவலுடன் பேட்டியளித்து இருக்கிறார்.

2047 -ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த 2 வழக்கறிஞர்களும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் பால் கனகராஜின் அளித்த பேட்டி இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது. இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த பால் கனகராஜின் செயலை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பால் கனகராஜ் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியிருப்பது பாஜக மட்டும் இன்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications