முருகனிடம் பாஜக திட்டம் பலிக்காது.. நாளை மத நல்லிணக்க வழிபாடு.. செல்வபெருந்தகை அறிவிப்பு!
சென்னை: திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் சிக்கந்தர் பாதுஷா ஆகிய இரு ஆலயங்களிலும் நாளை மத நல்லிணக்க வழிபாடு நடத்த உள்ளதாக காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது என்று கூறியுள்ள அவர், மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்போரை தமிழக அரசு அடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று திடீரென பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக 144 தடை உத்தரவு போடப்பட்டு, தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் மலையிலும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது திருப்பரங்குன்றத்தில் சூழல் சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செல்வபெருந்தகை கூறுகையில், மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்கு ஒரு கும்பல் கையில் எடுத்துள்ளது. நாளை காங்கிரஸ் சார்பாக எங்கள் தலைவர்களுடன் திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய உள்ளோம். அதேபோல், சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.
தமிழக அரசு மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அந்நிய முதலீடு, தொழிற்சாலை உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி புரட்சி என்று ஏராளமான முன்னேற்றம் நடந்து வருகிறது. இதனை கெடுப்பதற்கு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகள் பாஜகவின் துணையுடன் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படியான சக்திகளை ஜனநாயக சக்திகள் அடையாளம் காண வேண்டும்.
அரசியல், ஆன்மீகம் வேறு. அரசியலை ஆன்மீகத்தில் கலக்க கூடாது. இதனை மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்போரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை மென்மையாக இருக்க கூடாது. ஏற்கனவே எல்.முருகன் தலைவராக இருந்த போது, வேல் யாத்திரை நடத்தி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.
தற்போது மீண்டும் முருகனை கையில் எடுத்துள்ளார்கள். திருப்பரங்குன்றத்தில் ஒருவர் போட்டியிடுவதற்காக, அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக வர வேண்டும் என்று ஒருவர் முயற்சிக்கிறார். அதற்காக எல்லா குறுக்கு வழிகளிலும் செயல்படுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மதக் கலவரம், சாதிக் கலவரத்தை தூண்டுவோரிடம் மென்மையான போக்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications