ராஜ்யசபா சீட் தர்றோம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. தேமுதிக, பாமகவுக்கு ‘செக்’ வைக்கும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியில் ராஜ்யசபா சீட் கேட்கும் கட்சிகள், லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என 'செக்' வைத்துள்ளது பாஜக.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அதிமுக, பாஜகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவை எட்டவில்லை. தேமுதிக மற்றும் பாமகவை தங்களுடன் கூட்டணியில் இணைக்க அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக முயன்று வருகிறது.

BJP puts condition to DMDK and PMK for lok sabha alliance

இந்த சூழலில் அண்மையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக பிரேமலதா கருத்து கேட்டார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, அதிரடியாக கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் எனத் தெரிவித்தார் பிரேமலதா. மேலும், அக்கட்சியுடன் மறைமுகமாக பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், லோக்சபா சீட்கள் குறைந்தாலும் பரவாயில்லை, ஒரு ராஜ்யசபா சீட் என்பதை அழுத்தமாக தேமுதிக வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்ற தேமுதிகவின் நிபந்தனையால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருவதால் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேமுதிகவின் நிபந்தனையை எந்த கட்சி ஏற்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, பாமகவும் ராஜ்யசபா சீட் நிபந்தனையை அதிமுக, பாஜகவிடம் வைத்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, இந்த முறை, அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முனைப்பில் உள்ளது.

தேமுதிகவை போலவே பாமகவும் ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுக மற்றும் பாஜகவிடம் துண்டு போட்டுள்ளது. கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கிய 7 தொகுதிகளும் வேண்டும், அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என்பதுதான், அதிமுக, பாஜக இரண்டு கூட்டணியிலும் பாமகவின் உறுதியான நிபந்தனை என்கிறார்கள்.

ராஜ்யசபா சீட் கேட்டு, பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்டு பிடித்து வரும் நிலையில், ராஜ்யசபா சீட் கொடுக்க பாஜக, அதிமுக என இரு கட்சிகளுமே தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ராஜ்யசபா சீட் கேட்கும் கட்சிகளிடம் பாஜக பதிலுக்கு ஒரு நிபந்தனையை வைத்துள்ளது.

பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பேசுகையில், "மாநிலங்களவை சீட் கேட்பவர்கள் மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜக தொண்டர்களின் எண்ணம்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் கேபி ராமலிங்கத்தின் இந்தக் கருத்து தேமுதிக, பாமகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ராஜ்யசபா சீட் முக்கியமா, சொந்த சின்னத்தில் நிற்பது முக்கியமா என்ற குழப்பமான நிலையை நோக்கி, பாமக, தேமுதிகவை நகர்த்தியுள்ளது பாஜக. இந்தக் கட்சிகள் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+