Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது புலம்பல்! ஆளுநராக தொடர தகுதியற்றவரா ஆர்என் ரவி? ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலினை சாடிய பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் பக்கம் பக்கமாக புலம்பி இருக்கிறார். அவர் ஏன் இப்படி செயல்படுகிறார் என பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்என் ரவி நீக்கியது திமுகவை கோபமடைய செய்தது. அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையீட்டால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

BJP Raama Sreenivasan attacks CM stalin who writes letter to president to remove RN Ravi from the governor

அதன்பிறகு அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைக்கு அனுமதி கோரியதற்கு ஆளுநர் ஆர்என் ரவி அனுமதியளிக்கவில்லை. கோப்புகள் தனக்கு வரவில்லை எனக்கூறி அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுவும் திமுகவை கோபப்படுத்தியது. கோப்புகள் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களை திமுக வெளியிட்டது.

இதனால் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று முதல்வர் ஸ்டாலின் 15 பக்க கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். அதில் ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா ஜனநாயக நாடாகவும், மதசார்பற்ற நாடாகவும் உள்ளது. ஆனால் இந்த அடிப்படை கொள்கைகளில் நம்பிக்கை இல்லாத ஆளுநர் அரசியலமைப்பு பதவியை வகிக்க தகுதியற்றவர். அரசியல்வாதியாக செயல்படும் அவர் ஆளுநர் பதவியில் தொடர கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு அவர் வேறுபட்டு செயல்படுகிறார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறார். ஊழல் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்காமல் உள்ளார். இதனால் அவர் ஆளுநர் பதவி வகிக்க தகுதியற்றவராக தன்னை நிரூபித்துள்ளார். இதனால் ஆளுநர் பதவியில் அவரை தொடர வைப்பதா? இல்லையா? என்பது தொடர்பான முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் ஸ்டாலின் கடிதம் குறித்து பாஜகவின் மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் பக்கம் பக்கமாக புலம்பி இருக்கிறார். பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆட்சி சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் அந்த ஆட்சி நீடிக்க கூடாது. ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று மத்திய அரசு ஆளுநர் பரிந்துரை செய்வார். இதுதான் 75 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கம்.

ஆனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதையும் உங்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் என புலம்பி இருப்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருக்கிறது. முதல்வர் ஏன் இப்படி கடிதம் எழுதுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களின் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன் என கூறினால் முதல்வர், ஆளுநருக்கே அவரை ராஜினாமா செய்யக்கோரி கடிதம் எழுதி இருக்கலாம். இதன்மூலம் திமுக பொதுமக்களுக்கு சொல்ல வரும் செய்தி என்ன?

எந்த இடத்தில் ஆளுநர் இந்த அரசு நடத்த தடையாக இருந்தார்? எந்த மசோதாவுக்கு அவர் கையெழுத்திடவில்லை. அவர்கள் அனுப்பிய 82 மசோதாக்களில் அனைத்திலும் கையெழுத்தாகி உள்ளது. கூட்டுறவு மசோதா தமிழக அரசு திரும்ப பெற்றது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு கூட ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்தனர். அதற்கும் ஒப்புதல் அளித்தார். அரசு நடைமுறையில் ஆளுநர் தலையிடுவது இல்லை. ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என்றால் அவர் பொம்மையாக இருந்தால் மட்டும் தான் அப்படி இருக்க முடியும். ஆளுநர் அதிகம் படித்தவர். உளவுத்துறையில் உட்சபட்ச அதிகாரத்தில் பணியாற்றியவர். அரசமைப்பு சட்டம் அறிந்தவர். அவர் தனது கருத்தை பொதுவெளியில் சொல்ல தான் செய்வார். ஆளுநருக்கு கருத்து உரிமை உள்ளது.

மாறாக திமுக கட்சியை பற்றி விமர்சனம் செய்தால் மட்டுமே கொதித்து எழ வேண்டும். அரசாங்கத்தில் உள்ள தவறு பற்றி சுட்டிக்காட்டினால் அதனை திருத்தி கொள்ள வேண்டியது தான் உங்களின் பொறுப்பு. சரியாக செயல்படுகிறீர்கள் என்றால் அதுபற்றி ஆளுநரை சந்தித்து விளக்கம் அளிக்கலாம். அதைவிட்டு ஆளுநர் பற்றி புரணி பேசி, கிசுகிசு பேசினால் ஒன்றும் நடக்காது.

அமெரிக்காவில் 50க்கும் அதிகமான மாகாணங்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசை அமைத்தனர். அது தான் அமெரிக்கா மாடல். ஆனால் இந்தியாவில் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாடலுக்கும், இந்திய மாடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முதலில் திமுக அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்.

மாநில சுயாட்சி என்ற பெயரில் திமுக குடும்ப அரசியலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பார்த்து கொள்வது என்பது எதேச்சதிகார போக்கு. திமுக மீது மக்கள் கொதித்து போய் உள்ளனர். இதனை மடைமாற்றம் செய்ய ஆளுநர் மீது தமிழக ஆட்சியார்கள் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இது எந்த பலனையும் அளிக்காது'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+