MGNREGA: காந்தி மீது பாஜகவுக்கு வன்மம்! அதான் அவர் பெயரை நீக்கியிருக்காங்க! ஸ்டாலின் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காந்தியின் மீதுள்ள வன்மத்தால் அவரது பெயரை 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு வாயில் நுழையாத வடமொழி பெயரை பாஜக அரசு வைத்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலை தள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!

mahatma gandhi mk stalin

🔨 தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

🔨100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

🔨 இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

🔨 பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

#ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்துவிட்டு விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் 90 சதவீத நிதி மத்திய அரசு ஒதுக்கி வந்த நிலையில் இனி 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்கும் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மீதி 40 சதவீதம் நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாம்.

இதற்கு நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை இட்டனர். கரூர் எம்பி ஜோதிமணி பேசுகையில், "நாங்கள் தமிழில் பேசினால் உங்களுக்கு எப்படி புரியாதோ, அது போல் நீங்கள் இது போன்ற திட்டங்களுக்கு வடமொழி பெயர்களை திணித்தால் எங்களுக்கும் புரியாது. அதை எப்படி உச்சரிப்பது என்றே தெரியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+