நமது குடும்பம்.. மோடி குடும்பம்.. லாலுவுக்கு பதிலடி- சென்னை பொதுக் கூட்டத்தை அதிரவைத்த பாஜக கோஷம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடிக்கு குடும்பமே இல்லை என பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு பதிலடி தரும் வகையில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் "நமது குடும்பம்- மோடி குடும்பம்" என்ற முழக்கம் மூலம் பாஜகவினர் அதிரவைத்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நமது குடும்பம் மோடி குடும்பம்- நாம் மோடி குடும்பம் என முழக்கமிட, பாஜகவினரும் திரும்ப முழக்கமிட்டு அதிரவைத்தனர்.

பீகாரில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பமே இல்லை; எனக்கு எல்லாம் நல்ல குடும்பம் இருக்கிறது; மோடி ஒரு இந்துவே இல்லை; பெற்ற தாய் இறந்த போது மொட்டை அடிக்காதவர் மோடி என கடுமையாக விமர்சித்தார். இது பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

BJP replies to Lalu Prasad Yadav against PM Modi with Mody Our Family slogan

லாலு பிரசாத் யாதவுக்கு பதிலடி தரும் வகையில் பாஜகவினர், மோடி நம் குடும்பம் என சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பின்னணியில் சென்னையில் இன்று பாஜகவின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களான ஜிகே வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நமது குடும்பம் என்றால் மோடி குடும்பம் என முழக்கமிடுங்கள் என்றார். இதனையடுத்து மத்திய அமைச்சர் எல்.முருகன், நமது குடும்பம் என முழக்கமிட பாஜகவினரும் மோடி குடும்பம் என உரக்க முழக்கம் எழுப்பினர்.

BJP replies to Lalu Prasad Yadav against PM Modi with Mody Our Family slogan

அத்துடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், நாம் அனைவரும் பிரதமர் மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடியை தமிழகக் குடும்பத்தின் சார்பாக வரவேற்கிறோம். 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ரூ11 லட்சம் கோடி வழங்கி இருக்கிறார். தமிழனை தமிழ் மொழியை நேசிப்பவர் பிரதமர் மோடி. எங்கு சென்றாலும் தமிழின் பாரம்பரியம், தமிழின் பெருமையை சொன்னவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தினரும் பிரதமர் மோடி குடும்பத்தினர் அங்கத்தினர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+