சரிப்பட்டு வராதுங்க.. சென்னை வரப்ப நானே பேசுறேன்.. கண்கள் சிவந்த அமித் ஷா.. எடப்பாடியை நெருக்கும் 80
சென்னை: பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா உடன் சமீபத்தில் நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் அவர் முக்கியமான சில விஷயங்களை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஒரு பதற்றம் நிறைந்த கட்டத்தில் உள்ளன. பாஜக கோரும் தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) வியப்பில் ஆழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி வட்டாரங்களின்படி, பாஜக சுமார் 54 சட்டமன்றத் தொகுதிகளைக் கோரியுள்ளது. இது அதிமுக தலைமைக்குள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் குறைவான தேர்தல் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கை அதிமுக எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தலைவர்கள் தெரிவித்தனர்.
உண்மையில் எத்தனை இடங்கள்?
ஆனால் உண்மையில் இது 54 இடங்கள் அல்ல 80 இடங்கள் என்று கூறப்படுகிறது. அதாவது அமித் ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன் அவரிடம் அதிமுகவிடம் 80 இடங்கள் கேட்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியில் பங்கு கிடைக்கும். ஆனால் அதிமுக 50 இடங்களுக்கே வேண்டாம் என்று சொல்கிறது. 50 இடங்களை கேட்டால் கூட கொடுக்க மாறுகிறது என்று நயினார் நாகேந்திரன் அமித் ஷாவிடம் கூறி உள்ளார்.
இதற்கு அமித் ஷா.. கவலைப்பட வேண்டாம்.. 80 இடங்களை வாங்கிவிடலாம்.. என்னிடம் லிஸ்டை கொடுங்கள்.. விரைவில் அமைச்சர் பியூஸ் கோயல் வருவார்.. அவருக்கு பொறுப்பு வாங்கியவுடன் வருவார் . அவர் பார்த்துக்கொள்வார். அதிமுக 50 தொகுதி எல்லாம் கொடுத்தால் தனியாக ஆட்சி அமைக்க பார்க்கும். அது சரிப்பட்டு வராது.. சென்னை வரும் போதே நானே பேசுகிறேன்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று அமித் ஷா நயினார் நாகேந்திரனிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
லிஸ்ட் என்ன?
2026 சட்டசபை தேர்தலுக்கு கோவையில் இருந்து அதிக இடங்களை பாஜக கேட்டுள்ளதால் அதிமுக அதிர்ச்சி அடைந்து உள்ளதாம். பாஜகவின் இந்த அணுகுமுறையால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்து உள்ளாராம். கோவையில் பாஜக கேட்ட இடங்கள் எவை எவை என்பது பற்றிய லிஸ்டும் தற்போது வெளியாகி உள்ளது.
கோவை மண்டலத்தில், பாஜக நகர்ப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறத் தொகுதிகளான கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் ஆகியவற்றை கேட்டுள்ளது. இவற்றுடன், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய தொகுதிகளையும் கேட்டு, மேற்கு மண்டலத்தில் தமது கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கோவை அதிக இடங்கள்
கோவையில் 10ல் 6 இடங்களை பாஜக கேட்டுள்ளதால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் கோரிக்கைகள் மேற்குத் தமிழ்நாட்டுடன் மட்டும் நிற்கவில்லை. தென் மாவட்டங்களிலும் கேட்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தில், பாஜக ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் ராதாபுரம் ஆகிய தொகுதிகளையும் கோரியுள்ளது.
அருகாமை மாவட்டங்களில், தென்காசி, தூத்துக்குடியின் ஒட்டப்பிடாரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பரமக்குடி மற்றும் சாக்கோட்டை ஆகிய தொகுதிகளை பாஜக கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மதுரை தெற்கு, போடிநாயக்கனூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகளையும் பாஜக கோரியுள்ளதாக ஒரு தகவல் உண்டு.
பாஜக மூவ்
ஒரு பெரும் நகர்வாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பூர், ஆனைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம் மற்றும் வேலூர் ஆகிய அனைத்து ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் பாஜக கோரி வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் நோக்கர்கள் இந்த வலுவான கோரிக்கைகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கும் என்று கருதுகின்றனர். 2026 தேர்தலுக்கு முன்னதாக, கூட்டணியின் ஒற்றுமையையும் தனது சொந்தத் தேர்தல் நலன்களையும் சமநிலைப்படுத்த வேண்டிய சவாலை அதிமுக எதிர்கொண்டுள்ளது.
அமித் ஷா வருகை
தமிழ்நாட்டை குறிவைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தன் தமிழக வியூகம் தொடர்பாக, வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அமித் ஷா தங்குவதற்கு வசதியாக அவர் இந்த குடியிருப்பை தேர்வு செய்வார் என்கிறார்கள். கிண்டி, அடையார் சுற்றுவட்டாரத்தில் அவருக்கான தற்காலிக குடியிருப்பு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் குடியிருப்புகளை தேர்வு செய்யும் தேடுதல் வேட்டை சில பாஜக தலைகள் வழியாக தேர்வு செய்யப்பட்டு வருகிறதாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15 அன்று தமிழகம் வரவுள்ளார். அவர் சென்னை - வேலூர் செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, கூட்டணி விரிவாக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications