காஸாவுக்காக குரல் கொடுத்தீங்களே! வங்கதேசத்தை பாருங்க.. நாளை இந்தியாவில் நடக்கும்! எச்.ராஜா காட்டம்
சென்னை: வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், காஸாவுக்காக, பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக இங்கு குரல் கொடுத்தவர்கள் வங்கதேசத்தில் ஜிகாதிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்களா பார்ப்போம் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் , இந்து மதத் தலைவர் கிருஷ்ணதாஸ் பிரபு, திங்கள்கிழமை டாக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” Bangladesh National Party கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்துவதையும், இந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்வதையும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள், இந்துக்களின் வணிக நிறுவனங்கள் மீது தீவைத்து இரையாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை கண்டித்து வந்தவர் ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள்...
வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
— H Raja (@HRajaBJP) November 26, 2024
Bangladesh National Party கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும்,… pic.twitter.com/IaCVMSxuec
இந்துக்கள் அமைதியாகவும், பிரிந்தும் இருந்தால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே ஒட்டுமொத்த இந்துக்களும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களும், கொலைவெறி தாக்குதல்களும் உலகின் பார்வைக்கு தெரியவரும் என இந்துக்களை உணர வைத்து லட்சக்கணக்கான இந்துக்கள் வங்க தேசத்தில் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலையை ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் உருவாக்கினார்.
இந்துக்களிடையே ஒற்றுமையையும், போராடும் குணத்தையும் அவர் உருவாக்கிய காரணத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்ட வங்கதேச அரசாங்கம் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளது .
ஒருகாலத்தில் பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்ததே இன்றைய பாகிஸ்தானும் அதிலிருந்து பிரிந்து உருவான வங்கதேசமும். ஆனால் பெருந்தன்மையோடு இஸ்லாமியர்களுக்கு தனிநாடு கொடுத்த இந்துக்களுக்கு அவ்விரு நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடூர சித்ரவதைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையிலும், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையிலும், இந்துக்கள் அதிகாரத்தில் இருக்கும் வரையிலும் தான் இந்து சமூகத்திற்கும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் முதல் வாழ்வியல் உரிமைகள் வரை பாதுகாப்பாக இருக்கும். EK Hai To Safe Hai என பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முழங்குவதும், Patenge To Katenge என உத்தர பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் முழங்குவதும் வெறும் வார்த்தைகள் அல்ல..
அதை நாம் உறுதியாக, முழுமையாக பின்பற்றுவதில் தான் இந்துக்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. இல்லையேல் இன்று பங்களாதேஷிலுள்ள இந்துக்களுக்கு நிகழ்வது நாளை பாரதத்திலுள்ள இந்துகளுக்கும் நிகழும் சூழ்நிலை உருவாகும். வங்கதேசத்தில் இந்துக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் குரல் கொடுப்போம். காஸாவுக்காக, பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக இங்கு குரல் கொடுத்தவர்கள் வங்கதேசத்தில் ஜிகாதிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்களா பார்ப்போம்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications