விஜய்தான் மையப்புள்ளி.. என்ன நடந்தாலும் இழுத்துடுங்க.. பாஜக கூட்டணியில் தவெக? டெல்லி பெரிய பிளான்
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தமிழக எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டணி கணக்கீடுகளில் ஒரு மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளார் என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயின் அரசியல் கருத்துகளுக்கும், அவரின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கும்.. பாஜகவிற்கும் இடையே தெளிவான ஒற்றுமை இருப்பதாக பாஜக தலைமை கருதுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தோல்விக்கு, திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒன்றிணைய வேண்டும்; வாக்குகளின் சிதறல் ஆளும் கட்சிக்கு மட்டுமே சாதகமாகும் என டெல்லி தலைமை தீவிரமாக நம்புகிறதாம். விஜயின் பொது உரைகள் திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும், அவரின் விமர்சனங்கள் அனைத்தும் திமுகவை நோக்கியே உள்ளன என அவர் கருதுகிறார்.

பாஜக - தவெக இடையே இப்போது வரை கூட்டணி இல்லை என்றாலும், திமுக எதிர்ப்பு அரசியலில் விஜய் செல்வாக்கு செலுத்துவதாக பாஜக பார்க்கிறது. மாநிலத்தில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் பாஜகவின் நோக்கத்துடன் விஜயின் நிலைப்பாடு ஒத்துப்போகிறது என்பதை பாஜக மூத்த தலைவர்கள் ஏற்கின்றனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால், பாஜகவும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக, கூட்டணியின் மாநில அளவிலான வியூகத்தில் ஒரு முக்கிய பங்காளியாகத் தொடரும் என்பதையும் இத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
விஜயை இழுக்க திட்டம்
தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்தும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சாத்தியக்கூறுகளை பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மதச்சார்பின்மை கருத்தில் காங்கிரசுடன் இயல்பான கூட்டாளிகள் என்று தவெக கடந்த வாரம் அறிவித்த பின்னரே, பா.ஜ.கவின் முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன. காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 23 அன்று சென்னையின் புறநகரில் NDA-வின் முதல் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றுவார் என வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. பி.எம்.கே இணைந்த பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளின் பங்கேற்பும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் கூட்டத்திற்கு முன்னதாகவே, மேலும் பல கட்சிகள் NDA-வில் சேர பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்.
பாஜக பிளான்
தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்து NDA கூட்டணியை உருவாக்க முயலும் பாஜக, நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து தீவிரமாக ஆராய்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு வருகையின்போது கட்சி மையக் குழுக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் நான்கே இடங்களை வென்ற பாஜகவால், 2024 மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தைக் கூட பெற முடியவில்லை என்பதால், அவரது அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏன் சந்திக்கவில்லை?
கூட்டணித் தலைவர் இ.பி.எஸ்-ஐ அமித் ஷா திட்டமிட்டு சந்திக்காதது, என்.டி.ஏ அனைத்து தி.மு.க எதிர்ப்புச் சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதற்காகவே என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூட்டணியில் எடப்பாடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படாது.. மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும் என்று அமித் ஷா சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. விஜயுடன் கூட்டணி வைக்க அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்தும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சாத்தியக்கூறுகளை பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மதச்சார்பின்மை கருத்தில் காங்கிரசுடன் இயல்பான கூட்டாளிகள் என்று தவெக கடந்த வாரம் அறிவித்த பின்னரே, பா.ஜ.கவின் முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன. காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் நிலைப்பாடு என்ன?
இந்த அரசியல் விவாதங்களின் மையத்தில் விஜய் முக்கியத்துவம் பெறுகிறார். எனினும், விஜய், பாஜகவை தனது கருத்தியல் எதிரி என்று சுட்டிக்காட்டி, அக்கட்சியுடன் எந்தவித கூட்டணியையும் மறுத்துள்ளார். அவரது கருத்தியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
தவெக பேரணியில் நடந்த உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையிலும், விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் தடையை எதிர்கொள்ளும் நிலையிலும், அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என கட்சி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் சிபிஐ சம்மன், வருமான வரி கேஸ், ஜனநாயகன் விசாரணை என்று பல காரணங்களால்.. விஜய் பாஜக உடன் கூட்டணிக்கு போனாலும் வியப்பு இல்லை என்கிறார்கள் சில தவெக தலைகள்!












Click it and Unblock the Notifications