மதுவந்தி வீடியோ வைரல்- பைனான்ஸ்சியரிடம் இருகை நீட்டி பிச்சை கேட்கிறேன்..ப்ளீஸ் கெஞ்சி கேட்கிறேன்..
சென்னை: ரூ.1 கோடி கடன் வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றியதால் நீதிமன்ற உத்தரவுப்படி பைனான்ஸ் நிறுவன நிர்வாகிகள் தமது வீட்டுக்கு சீல் வைக்க வந்த போது, இரு கையை நீட்டி... சார் ஐ ஆம் பெக்கிங்..கெஞ்சி கேட்கிறேன்.. லாக் வைச்சிடாதீங்க..ரொம்ப அசிங்கமாக போகும் என பாஜக பிரமுகர் மதுவந்தி கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழக பாஜகவின் சர்ச்சை பிரமுகர்களில் ஒருவர் மதுவந்தி. நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவைகளில் மதுவந்தி உளறி கொட்டிய வீடியோக்கள் பெரிதும் பேசப்பட்டவை.

கடன் வாங்கிய மதுவந்தி
பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் அப்பார்ட்மென்ட்டில் உள்ள வீட்டை வாங்குவதற்காக 2016-ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ1 கோடி கடன் வாங்கினார் மதுவந்தி.

சீல் வைக்க உத்தரவு
ரூ1 கோடி கடன் வாங்கியதற்கு தவணை தொகையை சில மாதங்கள் மட்டுமே மதுவந்தி செலுத்தியிருக்கிறார். அதன்ன்பின்னர் கடனை கட்டாமல் 5 ஆண்டுகளாக அவர் இழுத்தடித்துள்ளார் என்கிறது பைனான்ஸ் தரப்பு. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுவந்தி வீடு சீல் வைப்பு
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி மதுவந்தியின் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியில் எடுத்து வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. தற்போது இந்த வீடு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் வசமாகி இருக்கிறது.

மதுவந்தி கெஞ்சும் வீடியோ வைரல்
இந்நிலையில் வீட்டை சீல் வைக்க வந்தவர்களிடம் மதுவந்தி பேசும் வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இரு கைகளையும் கெஞ்சியபடி நீட்டிக் கொன்டே சார் ப்ளீஸ்... ஆம் பெக்கிங்... கெஞ்சி கேட்கிறேன்... லாக் பண்ணிடாதீங்க.. ரொம்ப அசிங்கமா போயிடும்.. ஐ வில் சார்ட் அவுட் சார்ட்லி.. என சிலரது பெயர்களையும் சொல்லி சார் சார் என கெஞ்சுகிறார் மதுவந்தி. ஆனால் இந்த கெஞ்சலை பொருட்படுத்தாமல் வீடு சீல் வைக்கப்பட்டது. மதுவந்தி கெஞ்சுகிற இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.












Click it and Unblock the Notifications