பீகாரில் ஜேடியூவை உறவாடி கெடுத்தாச்சு... அடுத்த டார்கெட் தமிழகம்? உஷாராகுமா அதிமுக-திமுக?
சென்னை: ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அந்த கட்சியை காலி செய்து அந்த இடத்துக்கு தான் வந்துவிடுவது என்கிற வியூகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறது பாஜக. பீகாரில் ஜேடியூவின் கதையை இப்படித்தான் முடித்து வைத்திருக்கிறது பாஜக.
பாஜக ஒரு மாநிலத்தில் காலூன்ற முடிவு செய்துவிட்டால் அதன் முன்னால் இருக்கும் அத்தனை குறுக்கு வழிகளையும் ஒரு கை பார்த்துவிடும். இதனை விமர்சித்தால் தேர்தல் அரசியல் என்பதே வெற்றிக்கானது மட்டுமே. எந்த வழியாக இருந்தால் என்ன என்கிற பதில்தான் வரும்.
திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே ஏப்பம் விட்டு பாஜகவாகி ஆட்சியை பிடித்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளையே காவியிஸ்டுகளாக்கியது. இதே பாணியில் பீகாரில் ஜேடியூவுடன் இணைந்து ஆட்சி அமைத்து இப்போது ஜேடியூவை சிராக் பாஸ்வானை வைத்து முடக்கி வைத்திருக்கிறது பாஜக.

தமிழகம்- அதிமுக
இதுஒருபுறம் இருக்க பாஜகவின் அடுத்த டார்கெட் எந்த மாநிலம்? எந்த கட்சியாக இருக்கும்? என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. வேறு எந்த மாநிலமாக இருக்கப் போகிறது சாட்சாத் தமிழகம்தான். பாஜகவின் பிரதான குறியாக இருக்கப் போவது அதிமுக, திமுகதான்.

பாஜகவின் பிடியில் அதிமுக
அதிமுகவில் வலிமையான தலைமை இல்லை என்பதை பயன்படுத்தி அந்த கட்சியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது பாஜக. ஆனால் தேர்தல் களத்தில் பாஜகவை அழைத்துக் கொண்டு போனால் உள்ளதும் போய்விடும் என்பதை உணர்ந்தும் அதிமுக இருக்கிறது. நீங்க என்னதான் கழற்றிவிட்டாலும் உங்களது பிடி எங்களிடமே இருக்கும் என்கிறது பாஜக.

ஜேடியூ கதியா அதிமுகவுக்கு?
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி அமைக்கும். ஆனால் அதிமுகவை விட எப்படி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்கிற கணக்குடன் பாஜக களமிறங்கும். தமிழகத்தில் அப்படி எல்லாம் காலூன்ற முடியாது என கனவில் மிதப்பவர்களுக்கு எந்த வழியில் பதிலடி கொடுத்து கணிசமான இடங்களைப் பெற முடியும் என்பதில் உன்னிப்பாக காய் நகர்த்தும் பாஜக.பாஜகவின் இந்த வியூகத்தில் பீகாரில் ஜேடியூவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஏற்படலாம்.

திமுகவுக்கு எதிராக கிங்மேக்கர்கள்
அதேநேரத்தில் பீகாரில் ஆர்ஜேடியின் ஒருசில அலட்சிய வியூகங்கள் எளிதாக பாஜக அணியை அரியணையை நோக்கி நகர்த்திவிட்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி அதே தவறுகளை செய்தால் தமிழகத்தில் அடுத்தது பாஜகவின் கூட்டணி ஆட்சியாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இருக்காது. மேலும் திமுகவின் ஆட்சிக் கனவை தகர்க்க புதிய புதிய கிங்மேக்கர்களாக பாஜகவின் பி டீம்கள் தமிழகத்தில் களமிறக்கப்படலாம் என்பதும் யதார்த்தமே
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications