ஆபரேஷன் பெயர்: தக்ஷிண் விஜய்; டார்கெட்: தமிழக ஆட்சி.. டிச.8-க்குப் பின் களமாட காத்திருக்கும் பாஜக!
சென்னை: தக்ஷிண் விஜய் என்ற பெயரில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்பதற்காக ஆபரேஷனை இன்னும் சில நாட்களில் அக்கட்சியின் மேலிடம் தொடங்க உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வைத்திருக்கும் பொதுப்பெயர் ஆபரேஷன் லோட்டஸ். இந்த ஆபரேஷன் தாமரை தமிழ்நாட்டில் அம்மஞ்சல்லி பைசாவுக்கும் இதுவரை கை கொடுக்காவில்லை.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா மட்டும்தான் பாஜக ஆளும் மாநிலம். தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி என்பது இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட சாத்தியமா என்பது தெரியாத ஒன்று. தெலுங்கானா, ஆந்திராவில் ஏதேனும் சிலபல சித்துகளை அரங்கேற்றினால் அங்கே ஆட்சி அதிகாரத்துக்கு அருகே பாஜக செல்லக் கூடும்.

தென்னக நிலவரம்
காஷ்மீர் முதல் நாகாலாந்து வரை விரிந்து பரந்து கிடக்கிறது பாஜகவின் சாம்ராஜ்யம். ஆனால் தென்னிந்தியாவில் காலூன்றி நிற்பதற்கே படாதபாடவேண்டிய நிலையில் இருக்கிறது. இத்தனைக்கும் தென்னிந்தியாவில் பாஜகவிம் சித்தாந்த பரமவைரிகளாக நிற்பவை தமிழ்நாடும் கேரளாவும்தான். அதேநேரத்தில் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் பல குடுமிகள், மத்திய விசாரணை ஏஜென்சிகளின் பிடியில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் எதனையுமே சாதிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

ஆபரேஷன் தக்ஷிண் விஜய்
இதனால்தான் தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் அதிகாரத்தை நெருங்குவது; 2032-ல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற நீண்டகால திட்டத்துடன் முழுவீச்சில் களமிறங்கப் போகிறதாம் பாஜக. இந்த ஆபரேஷனுக்கு ஆபரேஷன் லோட்டஸ் என சூட்டவில்லையாம். ஆபரேஷன் தக்ஷிண் விஜய் (தென்னகத்தில் வெற்றி).. இதுதான் பாஜக சூட்டியிருக்கும் புதிய ஆபரேஷனுக்கான பெயராம். இந்த ஆபரேஷனுக்கு வெள்ளோட்டமாகத்தான் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலைப் பார்க்கிறதாம் பாஜக.

கர்நாடகா, தெலுங்கானா தேர்தல்
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் மொத்தம் 129 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது வெறும் 29தான். ஆகையால்தான் தென்னிந்தியாவை கபளீகரம் செய்தே ஆக வேண்டும் என்கிற கோதாவில் குதித்துள்ளதாம் பாஜக. கர்நாடகாவுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. கர்நாடகாவும் தெலுங்கானாவுக்கும் தேர்தல் நடைபெறும். கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கவும் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றவும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது பாஜக.

தமிழகம் அதிமுக
தமிழகத்தில் ஆளும் திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிட கட்சிகளைத் தாண்டி செல்ல முடியாத நிலையில் இருக்கிறது பாஜக. ஆகையால்தான் அதிமுக எனும் திராவிட கட்சியை அத்தனை அவமானங்கள் ஏற்பட்டாலும் தன்வசமாக்கி தக்க வைத்துக் கொள்வதில் பகீரத பிரயத்தனத்தை தொடர்ந்து செய்கிறது பாஜக. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு சதவீதம் அல்லது வெற்றி சதவீதம் என்பது மிக சொற்பம்தான். இரு கட்சிகளுக்குமே மிக குறைந்தது 30% வாக்குகள் உள்ளன. இப்போதைய நிலையில் பாஜக, இந்த 30% வாக்கு உள்ள அதிமுகவை அவ்வளவு எளிதாக விட்டுவிடப் போவதும் இல்லை.

அந்த 12 தொகுதிகள்
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகள் என்பது பாஜகவில் இலக்கு என சொல்லப்படுகிறது. ஆனால் குறைந்தது 12 அல்லது 10 தமிழக எம்.பிக்களுடன் லோக்சபாவுக்குள் சென்றாக வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிஜமான இலக்காம்.இதுதான் ஆபரேஷன் தக்ஷிண் விஜய்யின் ஃபர்ஸ்ட் பேஸாம்- முதல் கட்டமாம். குறிப்பாக தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில்தான் பாஜகவின் கழுகுப் பார்வை முழுவதும் இருக்கிறதாம். பிற மாநிலங்களைப் போல தீவிர இந்துத்துவா, வன்முறைப் பாதையில் இந்துக்கள் வாக்குகள் ஒருங்கிணைப்பு என்கிற வியூகங்களை தமிழ்நாடு தவிடுபொடியாக்கிவிடுகிறது. ஆகையால் உறவாடி வாக்குகளை வேட்டையாடுதல் என்கிற பொய்முகத்துடன் களத்துக்கு வரத் திட்டமிட்டு அரங்கேற்றத்தை செய்து வருகிறதாம் பாஜக. இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ந் தேதி முடிவடைந்த உடன் முழுவீச்சில் ஆபரேஷன் தக்ஷிண் விஜய் கையில் எடுக்கப்படுமாம். இந்த முறை பாஜகவின் ஆபரேஷனில் எதிர்பாராத ஏராளமான திருப்பங்களுக்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்கிறன டெல்லி தகவல்கள்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications